• India
```

கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்த சீனாவின் மறு சுழற்சி ராக்கெட்!

China Missile News | China Launch Missile

By Dharani S

Published on:  2024-09-26 12:35:29  |    169

China Missile News-டீப் ப்ளூ ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் நெபுலா 1 மறு சுழற்சி ராக்கெட் ஆய்வு கடைசி கட்டத்தில் தோல்வி அடைந்து இருக்கிறது.

மறு சுழற்சி செய்யக் கூடிய ராக்கெடுகள் என்பது சாத்தியமா?
பொதுவாக ஒரு ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கு, பல்லாயிரம் கோடிகள் செலவு ஆகிறது. அதுவே அந்த ராக்கெட்டை திரும்ப திரும்ப பயன்படுத்த முடிந்தால் அந்த பல்லாயிரம் கோடிகளை குறைக்கலாம் என்ற நோக்கில் தொடர்ந்து பல நாடுகள் மறு சுழற்சி செய்யக் கூடிய ராக்கெட் ஆய்வில் இறங்கி இருக்கின்றன. பொதுவாக மறு சுழற்சி செய்யக்கூடிய ராக்கெட்களை தயாரித்து அதை பலமுறை ஏவி வெற்றியும் கண்ட ஒரே நிறுவனமாக பார்க்கப்படுகிறது அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம். இந்த நிறுவனம் கண்டு பிடித்து இருக்கும் பால்கன் 9 வகை ராக்கெட்டுகளை குறைந்த பட்சம் 10 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்த முடியுமாம். ஆதலாம் மறு சுழற் செய்யக் கூடிய ராக்கெட்டுகள் அமெரிக்காவிற்கு சாத்தியம் என்றால் ஏனைய நாடுகளுக்கும் சாத்தியம் தான்.



சரி, சீனாவின் நெபுலா 1 பற்றி பார்க்கலாம்
சீனாவின் டீப் ப்ளு நிறுவனம் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரித்த ஒரு மறு சுழற்சி ராக்கெட் வகை தான் இந்த நெபுலா 1. செங்குத்தாக விண்ணில் பாய்ந்து, அதே முறையில் செங்குத்தாக தரையிறங்கும் அமைப்பை கொண்டு இருக்கிறது இந்த நெபுலா 1. அனைத்து கட்டமைப்பு வேலைகளும் வெற்றிகரமாக முடிந்து சீனா ராக்கெட்டை ஏவ தயாரானது. கிட்டதட்ட 11 நிலைகள், 10 நிலைகளை ராக்கெட் சரியாக அடைந்தது. அதாவது விண்ணில் பாய்ந்து குறிப்பிட்ட தூரத்தை அடைந்து, லேண்ட் ஆகும் கடைசி நிமிடத்தையும் அடைந்தது. வெற்றிக்கான அந்த கடைசி நொடிக்காக அனைவரும் காத்து இருந்த போது திடீரென்று வெடித்து சிதறியது. இன்னும் ஒரு நிலையை மட்டும் வெற்றிகரமாக அடைந்து இருந்தால் சீனா விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய மைல்கல்லை எட்டி இருக்கும். 



சமீபத்தில் இந்தியாவும் ரூமி 1 எனப்படும் மறு சுழற்சி செய்யக்கூடிய வகையிலான சிறிய வகை ராக்கெட்டை வெற்றிகரமாக ஏவியது. ஆனால் இந்தியா மொபைல் லாஞ்ச் பேட் மூலம் ஏவுதலை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவிலான மறு சுழற்சி ராக்கெட்டுகள் இந்தியாவில் இன்னும் ஆய்வு நிலையில் தான் இருக்கின்றன