சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளில் பொதுமக்கள் பெருமளவில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
சென்னையில் மின்சார ரயில், மெட்ரோ ரயில் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளில் பொதுமக்கள் பெருமளவில் ஸ்மார்ட் கார்டுகளை பயன்படுத்தி வருகின்றனர். பயணிகள் வசதிகளை மேம்படுத்தும் நோக்கில், தமிழக அரசு அனைத்து முக்கிய போக்குவரத்து சேவைகளுக்கும் ஒரே பயணச்சீட்டுடன் பயணிக்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிக்க "சிங்கார சென்னை" ஸ்மார்ட் கார்டு பயன்படுத்தலாம். முதல் கட்டமாக, ஸ்டேட் பேங்க் மூலம் 50,000 ஸ்மார்ட் கார்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இதற்கிடையில், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தற்போதைய மெட்ரோ கார்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் மாற்றாக, புதிய ‘சிங்கார சென்னை’ கார்டு பயன்பாட்டிற்கு வரவுள்ளது.
மெட்ரோ பயணிகள் ஏப்ரலுக்கு முன்பாக பழைய கார்டுகளில் உள்ள மீதித் தொகையைக் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும், புதிய ‘சிங்கார சென்னை’ கார்டு மூலம் நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில்களில் பயணிக்க முடியுமென அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.