Bank Account Opening Via TN Ration Shops - தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகள் மூலமாகவும், வாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு துவங்கும் வகையில் புதிய திட்டம் ஒன்றை தமிழக அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.
Bank Account Opening Via TN Ration Shops - மத்திய கூட்டுறவு வங்கிகள் தமிழகத்தில் இருக்கும் வேளான் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், உரக்கடன், கால்நடை பராமரிப்பு கடன், விவசாயப்பத்திரம் மூலம் தங்க நகை கடன் உள்ளிட்டவைகளை எல்லாம் வழங்கி வருகிறது, கடந்த 2023யில் மட்டும் 18.36 இலட்சம் விவசாயிகளுக்கு ரூ 15,500 கோடி வரை கடன் வழங்கி இருக்கிறது, ஆனாலும் கூட தமிழகத்தில் செயல்படும் பெரும்பாலான கூட்டுறவு வங்கிகள் எந்த வித செயல்பாடும் இல்லாமல் ஈ ஆடிக் கொண்டு இருக்கின்றன.
இன்னொரு முக்கியமான தகவல் என்னவென்றால் மத்திய கூட்டுறவு வங்கிகளில் இணைந்து இருப்பவர்களின் சராசரி வயது என்பது கிட்டதட்ட 50 ஆக இருக்கிறது, அதாவது எந்த இளைஞர்களும் மத்திய கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்துக் கொள்ள விரும்பவில்லை, இந்த நிலையை மாற்ற தான் தமிழக அரசு பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறது, கூட்டுறவு வங்கிகளையும் மற்ற பொதுத்துறை வங்கிகளை போல தரம் உயர்த்த தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது.
அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்தில் உள்ள அனைத்து ரேசன் கடைகளிலும் கூட்டுறவு வங்கிக் கணக்கை துவங்கும் வகையில் அரசு புதிய திட்டங்களை செயல்படுத்த இருக்கிறது, இதன் மூலம் பலரும் எளிதாக வங்கிக் கணக்கை துவங்கிடும் பட்சத்தில் கூட்டுறவு வங்கி வாடிக்கையாளர்களின் சராசரி வயதைக் குறைத்திட முடியும் என அரசு நம்பிக்கை கொள்கிறது, பல்வேறு இளைஞர்களையும் கூட்டுறவு வங்கிகளில் ஆர்வமாக இணைய வைப்பத்து இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
இதனால் நியாய விலை கடைக்காரர்களுக்கு பணிச்சுமை அதிகமாகும் என ஒரு பக்கம் எதிர்ப்பு இப்போதே கிளம்பி இருக்கிறது. ஆனால் அரசு சார்பில் கூறப்படுவது என்ன என்றால் இத்திட்டத்தின் மூலம் கூட்டுறவு வங்கிகளில் வாடிக்கையாளர்களை இணைக்கும் நியாய விலைக்கடைக்காரர்களுக்கு ஒரு அப்ளிகேசனுக்கு ரூ 5 ரூபாய் வீதம் வழங்கப்படும் என அரசு சார்பில் கூறப்பட்டு இருக்கிறது, ஒரு பக்கம் இத்திட்டம் நல்ல திட்டம் என்றாலும் கூட, சுமையை நியாயவிலைக்கடைக்காரர்கள் தான் சுமக்க வேண்டி வரும்.