Bomb Threats: Airlines Under Huge Finacial Risk - தொடரும் வெடிகுண்டு மிரட்டல்களால் இந்திய விமானங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகின்றன.
Bomb Threats: Airlines Under Huge Finacial Risk - கடந்த ஒரிரு வாரங்களாகவே இந்திய விமானங்களுக்கு தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல்கள் வந்த வண்ணம் இருக்கின்றன, கடந்த மூன்று வாரத்தில் மட்டும் இதுவரை 90 விமானங்களுக்கு மேல் வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டு இருக்கின்றன, இதனால் ஆங்காங்கே விமான சேவைகள் நிறுத்தப்பட்டு வருவதால், பயணிகளும் விமான நிறுவனங்களும் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றன. இண்டிகோ, ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் இதனால் பொருளாதார ரீதியாகவும் இழப்பை சந்தித்து வருகின்றன.
சரி, மிரட்டல்கள் எதன் மூலமாக வருகிறது?
விமானத்திற்கு பெரும்பாலான மிரட்டல்கள் சமூக வலைதளங்களின் மூலமாக வருவதாக தகவல், எந்த வித தகவல்களையும் உள்ளிடாமல் சமூக வலைதளங்களில் ஒரு ஃபேக் ஆன அக்கவுண்ட் மூலம் மிரட்டல் விடுக்கின்றனர், இது போக துண்டுச்சீட்டு, வாட்சப் மூலமாகவும் மிரட்டல்கள் பரவுகிறது, எல்லாம் புரளிகள் என்றாலும் கூட அதன் உண்மைதன்மையை ஆராய வேண்டியதும் அவசியம் என்பதால் பெரும்பாலான விமானங்கள் சோதனைக்கு பின்னரே பயணிக்கின்றன.
ஒரு சோதனைக்கு 3 முதல் 4 மணி நேரம் வரை ஆகுவதால் சில நேரம் விமானங்கள் தாமதமாக பறக்கிறது, சில நேரம் விமான சேவையே ரத்து செய்யப்படுகிறது, இதனால் அவசரத்திற்கு விமானத்தை பயன்படுத்தும் பயணிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர், இது போக இந்த புரளிக்கு மத்தியில் தடை செய்யப்பட்ட பிரிவினைவாத அமைப்பான காலிஸ்தான் அமைப்பும் ஏர் இந்தியா நிறுவனங்களுக்கு மிரட்டல்கள் விடுத்து இருப்பதால் இது இந்திய விமான சேவைக்கு பெரும் சவாலாகி இருக்கிறது.
இது குறித்து விமான போக்குவரத்து துறை அமைச்சகம் சொல்வது என்ன?
தொடர்ந்து வரும் விமான மிரட்டல்களை புரளி என்று கருதாமல் தகுந்த முறையில் ஆய்வு நடத்தப்படுகிறது, பயணிகளின் பாதுகாப்பு என்பது இங்கு புரளிகளை விட முக்கியமாக கொள்ளப்படுகிறது, புரளி பரப்புபவர்களின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு தான் வருகிறது, இனி பயணிகளோ இல்லை பொது ஜனங்களோ யாரேனும் துண்டு சீட்டுகள், சமூக வலைதளங்கள் மூலம் மிரட்டல் விடுப்பது கண்டுபிடிக்கப்படின் அவர்கள் வாழ்நாள் முழுவதும் விமானத்தில் பயணிக்க முடியாத நிலை ஏற்படும் என விமான போக்குவரத்து துறை அமைச்சகம் எச்சரித்து இருக்கிறது.