After Amazon Starbucks Also Mandate Work From Office - பிரபல ஸ்டார்பக்ஸ் நிறுவனம் ஊழியர்களை வாரத்திற்கு 3 நாள் அலுவலகத்தில் வைத்து வேலை செய்யும்படி பணித்து இருக்கிறது, மறுக்கும்பட்சத்தில் வேலை விட்டு நீக்கப்படுவார்கள் எனவும் எச்சரித்து இருக்கிறது.
After Amazon Starbucks Also Mandate Work From Office - அமெரிக்காவின் பிரபல காபி நிறுவனமாக அறியப்படும் ஸ்டார்பக்ஸ், உலகளாவிய அளவில் 38,000 ஸ்டோர்களை கொண்டு இருக்கிறது, அதன் அதிகப்படியான கிளைகள் அமெரிக்கா மற்றும் சீனாவில் இருக்கின்றன, ஸ்டார்பக்ஸ் வருடத்திற்கு கிட்டதட்ட உலகளாவிய அளவில் 40 மில்லியன் டாலர் அளவிற்கு வருமானம் ஈட்டி வருகிறது, உலகளாவிய அளவில் மிகப்பெரிய காபி & ட்ரிங்ஸ் நிறுவனமாக ஸ்டார்பக்ஸ் செயல்பட்டு வருகிறது.
பொதுவாக ஸ்டார்பக்ஸ், காபி நிறுவனமாக இருந்தாலும் கூட ஊழியர்களை ஹைபிரிட் மற்றும் ரிமோட் முறையில் வேலை செய்ய அனுமதிக்கிறது, இதனை பயன்படுத்திக் கொண்டு ஊழியர்கள் பலரும் ஹைபிரிட் வேலையை விடுத்து ரிமோட் முறையை பயன்படுத்த ஆரம்பிக்கவே, அலுவலகத்தில் வந்து வேலைபுரிபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்தது, இதனால் ஸ்டார்பக்ஸ்சின் ஆப்லைன் வேலைகள் வெகுவாக பாதித்தது.
சில மாதங்களாகவே ஸ்டார்பக்ஸ்சின் ஆப்லைன் ஸ்டோர்கள் ஊழியர்கள் இன்றி வெகுவான சிரமத்திற்கு உள்ளானது, இதனை கருத்தில் கொண்டு ஒவ்வொரு ஸ்டார்பக்ஸ் கிளைகளும் ஊழியர்களை அலுவலகத்திற்கு வந்து வேலை செய்யும்படி பணித்தது, ஆனாலும் ஒரு சில ஊழியர்களே அலுவலகத்திற்கு வந்து பணிபுரிந்தனர், பலரும் தொடர்ந்து ரிமோட் வொர்க்கையை கடைப்பிடித்தனர்.
இந்த சம்பவம் ஸ்டார்பக்ஸின் தலைமை நிர்வாகத்திடம் செல்லவே, தலைமை நிர்வாகம் ஊழியர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு தகவல் ஒன்றை அனுப்பியது, அதாவது அந்த தகவலில், " ஊழியர்கள் இனி வாரத்திற்கு குறைந்தபட்சம் 3 நாட்களாவது அலுவலகத்தில் வந்து வேலை செய்ய வேண்டும், ஊழியர்கள் மறுக்கும் பட்சத்தில் உடனடியாக வேலையை விட்டு நீக்கப்படுவீர்கள் " என எச்சரிக்கை விடுத்து இருக்கிறது.