• India
```

படித்தவர்களுக்கு 5,000 உதவித் தொகையுடன் டாப் நிறுவனங்களில் பயிற்சி, ஒன்றிய அரசின் புதிய திட்டம்!

How To Apply PM Internship Scheme | PM Internship Scheme

PM Internship Scheme -படித்து முடித்தவர்களுக்கு ஐந்தாயிரம் உதவித் தொகையுடன், டாப் நிறுவனங்களில் பயிற்சி அளிக்கும் புதிய திட்டம் ஒன்றை ஒன்றிய அரசு அறிமுகப்படுத்தி இருக்கிறது.

பிரதம மந்திரி பயிற்சி திட்டம்

நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் பெருகி இருக்கும் நிலையில், ஒன்றிய அரசு, படித்து வேலையில்லாதவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது, அது போக அரசு வேலைகளுக்கு படிக்கும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் பல இலவச கோச்சிங்கையும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன. 

இந்த நிலையில் தான் படித்த இளைஞர்களுக்கு என ஒன்றிய அரசு, பிரதம மந்திரி பயிற்சி திட்டம் என்ற புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது, இத்திட்டத்தின் மூலம் படித்த இளைஞர்களுக்கு, ரூபாய் 5000 உதவித் தொகையுடன், இந்தியாவின் டாப் 500 நிறுவனங்களில் பயிற்சி அளிக்கப்படும், பயிற்சி முடிந்ததும் ஒரு நேர உதவித் தொகையாக 6,000 ரூபாயும் வழங்கப்படும் என ஒன்றிய அரசு அறிவித்து இருக்கிறது.


சரி திட்டங்களில் சேருவதற்கான தகுதி என்ன?

1) இத்திட்டத்தின் கீழ் 21 வயது முதல்  24 வயது வரை உள்ள படித்த மாணவர்கள் சேரலாம்.

2) ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட நிறுவனங்களில் படித்த மாணவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் அல்ல.

3) முழு நேரம் வேலை பார்ப்பவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் அல்ல.

4) வீட்டில் யாரும் அரசு வேலையில் இருந்தால் இத்திட்டத்திற்கு தகுதியானவர்கள் அல்ல.

தேவையான ஆவணங்கள்

1) ஆதார் கார்டு

2) தனிப்பட்ட இமெயில் ஐடி

3) மொபைல் நம்பர்

4) முகவரி சான்று

5) பான் கார்டு

6) ரேசன் கார்டு

இத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு என்ன கிடைக்கும்?

1) மாதம் 5,000 உதவித் தொகை கிடைக்கும்.

2) இந்தியாவின் மிகப்பெரிய ஒரு நிறுவனத்தில் பயிற்சியும் கிடைக்கும்.

3) படித்து முடித்தவர்களுக்கு ஒரு வெளிப்படையான வாய்ப்பு கிடைக்கும்.

4) 5 வருடங்களில் ஒரு, 1 கோடி இளைஞர்களுக்கு இத்திட்டத்தின் மூலம் வாய்ப்பு கிடைக்கும்.