Mudhalvan Marunthagam Start Up - தமிழக அரசு முதல்வர் மருந்தகம் தமிழகம் முழுக்க அமைக்க இருக்கும் நிலையில், அதை அமைக்கும் வாய்ப்பை பொது ஜனங்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறது, அது குறித்து பார்க்கலாம்.
Mudhalvan Marunthagam Start Up - இந்தியாவில் மட்டும் வருடத்திற்கு 50 பில்லியன் டாலர் அளவிற்கு மருந்து கொள்முதல் நுகர்வோர்களால் செய்யப்படுகிறது, பாராமெச்சுட்டிகல்ஸ் என்பது இந்தியாவின் ஒரு மிகப்பெரிய வர்த்தகமாக இருப்பது குறிப்பிடத்தக்கது, கிட்டதட்ட 60 சதவிகிதம் மக்கள் இந்தியாவில் நோய்வாய்படும் போது அவர்களின் வருமானத்தில் 72 சதவிகிதம் மருந்துக்காக செலவிடும் நிலை ஏற்படுபவதாகவும் தகவல்,
பொதுவாக பெரும்பாலும் மருந்து விற்பனை என்பது தனியார் விற்பனை மையங்களால் தான் அதிகம் நிறுவப்பட்டு இருக்கிறது, அதுவே அரசு எடுத்து நடத்தினால் மக்களுக்கு கொஞ்சம் எளிமையான விலையில் கொடுக்க முடியும், அதனை கருத்தில் கொண்டே தமிழக அரசு முதல்வன் மருந்தகம் என்ற பெயரில் ஒரு குறைந்த விலை மருந்தகத்தை ஏற்படுத்த முடிவு செய்து இருக்கிறது,
முதல்கட்டமாக தமிழகம் முழுக்க 1000 முதல்வன் மருந்தகத்தை ஏற்படுத்த தமிழக அரசு முடிவெடுத்து இருக்கிறது, இந்த முதல்வன் மருந்தகத்தை அமைக்க பி.பார்ம்..டி.பார்ம் படித்து முடித்தவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது, பொது ஜன மக்களும் ஆரம்பிக்க வழி கோரலாம், ஆனால் பி.பார்ம்..டி.பார்ம் படித்து முடித்தவர்களின் ஒப்புதலோடு கண்கணிப்போடு நடத்தும் வகையில் வழி வகை செய்ய வேண்டும்,
இந்த முதல்வன் மருந்தகத்தில் மக்களுக்கு தேவையான அனைத்து பொதுவான மருந்துகளும் எளிய விலையில் கிடைக்கும் படி செய்வதே இந்த திட்டத்தின் நோக்கம், விண்ணப்பிக்க நினைப்பவர்கள் www.mudhalvanmarunthagam.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம், ஜனவரி முதல் இந்த முதல்வன் மருந்தகம் தமிழகம் முழுக்க பயன்பாட்டுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.