• India
```

திடீர் என்று பால் விலை உயர்வு...எளிய மக்களை பாதிக்கும் அபாயம்...!

Milk Price Hike In Tamil Nadu

By Ramesh

Published on:  2024-11-09 00:27:52  |    354

Milk Price Hike In Tamil Nadu - பிரபல தனியார் பால் விற்பனை நிறுவனம் ஒன்று பால் விலையை ரூ 2 அளவிற்கு உயர்த்தி இருக்கிறது, இதனால் எளிய மக்கள் பாதிப்படையும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது.

Milk Price Hike In Tamil Nadu - உலகளாவிய அளவில் அதிக அளவிற்கு பால் உற்பத்தி செய்வதும் இந்தியா தான், அதே சமயத்தில் உலகளாவிய அளவில் பாலை அதிக அளவிற்கு பயன்படுத்துவதும் இந்தியா தான், இந்தியாவின் வருடாந்திர பால் உற்பத்தி 200 மில்லியன் டன்களை தாண்டுகிறது, ஒரு காலத்தில் இந்தியா 85% மாடுகளில் இருந்து நேரடியாக பெறப்படும் பாலை பயன்படுத்தி வந்தது.

ஆனால் தற்போது மாடுகளில் இருந்து நேரடியாகப் பெறப்படும் பாலை 30 சதவிகிதத்திற்கும் குறைவாகவே பயன்பாட்டில் இருக்கிறது, மீதி அனைத்துமே பாக்கெட் பால்கள் தான், அதிலும் சிட்டியில் எல்லாம் மாட்டு பாலே கிடைப்பதில்லை, அவ்வாறு கிடைப்பவைகளையும் மொத்தமாக கொள்முதல் செய்து ஒரு சில நிறுவனங்கள் பால் பிராடக்டுகளை தயாரித்து ஏற்றுமதி செய்து வருகின்றனர்.



தமிழ்நாட்டை பொறுத்தவரை நாள் ஒன்றுக்கு 233 இலட்சம் லிட்டர் பால் உற்பத்தி செய்யப்படுகிறது, சராசரியாக ஒவ்வொரு தனிமனிதனும் தமிழகத்தில் பயன்படுத்தும் பாலின் அளவு 362 கிராம் ஆக இருக்கிறது,  தமிழக கூட்டுறவு பால் உற்பத்தி மையமாக ஆவின் தான் தமிழகத்தின் மிகப்பெரிய பால் சப்ளையராக இருக்கிறது, இரண்டாவதாக ஆரோக்யா பால் நிறுவனம் இருக்கிறது.

இந்த நிலையில் ஆரோக்யா நிறுவனம் அரை லிட்டர் பால் விலையை 37 ரூபாயில் இருந்து 38 ரூபாய்க்கு உயர்த்தி இருக்கிறது, 1 லிட்டர் பாக்கெட் பால் விலையை 66 ரூபாயில் இருந்து 68 ரூபாய்க்கு உயர்த்தி இருக்கிறது, தமிழகத்தில் ஆவினுக்கு அடுத்து ஆரோக்யா ஒரு நம்பிக்கையான நிறுவனம் என்பதால் அதை பயன்படுத்தும் எளிய மக்கள் இந்த விலை உயர்வால் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது, இதனால் மற்ற தனியார் நிறுவனங்களும் பால் விலையை உயர்த்த வாய்ப்பு இருக்கிறது.