Why TATA Introduced Nano Cars - ரத்தன் நாவல் டாடா நானோ கார்களை உருவாக்கியதில் நம் நாட்டின் துயர சம்பவம் ஒன்றும் அடங்கி இருக்கிறது அது என்ன என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Why TATA Introduced Nano Cars - ரத்தன் நாவல் டாடாவிற்கு முதன் முதலாக நானோ கார்களை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது 2000 காலக்கட்டம் தான், ஆனால் அப்போது அது வெறும் கான்சப்டாக தான் இருந்தது, 2008 ஆம் ஆண்டு தான் அது உருவம் பெற்றது, ரத்தன் டாடாவின் மிகப்பெரிய கனவு அது, மிடில் கிளாஸ் மக்களும் கார் வாங்க ஏதுவாக ரூ 1 இலட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டது, கிட்ட தட்ட அறிமுகமான இரண்டு ஆண்டுகளிலேயே 70,000 கார்கள் விற்று தீர்ந்தது. கார் என்றால் அண்ணாந்து பார்த்த எளிய மக்களிடமும் கார் போய் சேர்ந்தது.
சரி, டாடா நானோ காரை உருவாக்க காரணம் என்ன?
ஒரு முறை சரியான மழை, ரத்தன் டாடா அப்போது காரில் மும்பை சாலையில் நிறுவனத்திற்கு சென்று கொண்டு இருந்தார், காரின் கண்ணாடிகள் வழியாக சாலையை பார்த்துக் கொண்டே சென்ற ரத்தன் டாடாவிற்கு ஒரு நிகழ்வு கண்ணில் படுகிறது, ஒரு எளிய மனிதன் பைக்கில் செல்கிறான் பின் பக்கம் அவரின் மனைவி கைக்குழந்தையுடன் உட்கார்ந்து இருக்கிறார், முன் பக்கம் ஒரு சிறுவன் உட்கார்ந்து இருக்கிறார், இருவருக்கும் நடுவில் அவர் உட்கார்ந்து அவர் பைக்கை இயக்கி கொண்டு இருக்கிறார்.
அந்த நிகழ்வை டாடா பார்க்கும் போது 'இப்படி செல்கிறாரே வழியில் சாலையில் ஏதும் இடறி விழுந்து விடக் கூடாதே!' என்று மனதில் நினைத்துக் கொண்டே இருந்தாராம், அடுத்த ஒரிரு நிமிடத்தில் டாடா நினைத்த மாறியே தான் நிகழ்ந்து இருக்கிறது, அந்த சம்பவம் டாடாவை வெகுவாக பாதித்து இருக்கிறது, அந்த நிமிடத்தில் தோன்றியது டாடா நானோ. ஒரு சிறு குடும்பத்திற்கு எளிய முறையில் பாதுகாப்பாக இயக்கும் வகையில் டாடா உருவாக்க நினைத்தது தான் அந்த டாடா நானோ.
நானோ காருக்கான விளம்பரத்தை எதிர்த்த ரத்தன் டாடா
டாடா நானோ கார் உருவாக்கப்பட்டதும் அதன் விளம்பர தாரர்கள் 'உலகிலேயே மிகக்குறைந்த விலையில் கார், சீப்பஸ்ட் கார்' என்று விளம்பரப்படுத்தி வந்தன, டாடா அதை கடுமையாக எதிர்த்தார், விலையை மையப்படுத்து வாடிக்கையாளர்களை வாங்க வைப்பதற்காக இந்த கார் உருவாக்கப்படவில்லை, இந்த காரின் நோக்கமே எளியோர்களை சென்றடைய வேண்டும் என்பது தான் என்று டாடா கூறவே அப்போதில் இருந்து ’People's Car' என நானோ கார் விளம்பரப்படுத்தப்பட்டது. 2008 முதல் 2018 வரை செயலில் இருந்த நானோ கார் தயாரிப்பு பின்னர் ஒரு சில காரணங்களுக்காக மொத்தமாக நிறுத்தப்பட்டது.