• India
```

மூன்று வருடத்தில்...இரண்டு மடங்கு உயர்ந்த...முடி மாற்று சிகிச்சையின் மார்க்கெட் மதிப்பு...!

Hair Transplant

By Ramesh

Published on:  2025-02-13 16:14:34  |    49

Hair Transplant Market Value - முடி மாற்று அறுவை சிகிச்சையின் மார்க்கெட் மதிப்பு கடந்த 3 வருடத்தில் இரண்டு மடங்கு உயர்ந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

மருத்துவ துறையின் கீழ் இடம் பெறும் முடி மாற்று அறுவை சிகிச்சையின் மார்க்கெட் மதிப்பு வருடத்திற்கு வருடம் பன்மதிப்பாக உயர்ந்து வருகிறது அது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், முன்பெல்லாம் ஒருவர் வழுக்கை தலையில் இருந்தால் சாகும் வரையில் அதே தலையில் தான் சுற்ற வேண்டும், அது இரு சரி செய்ய முடியாத குறையாக பார்க்கப்பட்டது.

ஆனால் தற்போது அந்த குறையையும் நிறையாக மாற்றும் சிகிச்சைகளை கண்டி பிடித்து அதை வெற்றிகரமாக நிகழ்த்தியும் வருகிறது இந்த நவீன உலகம், வழுக்கை தலையின் ஏனைய பரப்பில் அல்லது தாடியில் அல்லது நெஞ்சில் இருக்கும் முடிகளை எடுத்து வழுக்கை இருக்கும் இடத்தில் நட்டும் சிகிச்சை முறை தான் முடி மாற்று அறுவை சிகிச்சை எனப்படுகிறது.



ஒரு சிலர் தாடி ஒழுங்காக வளரவில்லை எனவும் கண் இமைப்பரப்பில் ஒழுங்காக முடி வளரவில்லை எனவும் கூட இந்த முடி மாற்று அறுவை சிகிச்சை எடுத்துக் கொள்கின்றனர், பொதுவாக வைக்கப்படும் கிராப்ட்களை பொறுத்து முடி மாற்று சிகிச்சைக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படுகிறது, குறைந்தபட்சம் ரூ 40,000 முதல் அதிக பட்சம் 5 இலட்சங்கள் வரை இந்த சிகிச்சைக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

ஒரு இதய சிகிச்சையை விட, முடி மாற்று சிகிச்சைக்கு வசூலிக்கப்படும் கட்டணம் இரண்டு மடங்கு என அறியப்படுகிறது, 2021 யில் முடி மாற்று சிகிச்சைக்கு இருந்த மார்க்கெட் மதிப்பு 4.4 பில்லியன் டாலர், ஆனால் தற்போது அதன் மார்க்கெட் மதிப்பு 2 மடங்கு உயர்ந்து 8.01 பில்லியன் டாலர் ஆக இருக்கிறது, 2035 யில் இதன் மார்க்கெட் மதிப்பு 15.65 பில்லியன் டாலராக உயரும் என கணிக்கப்பட்ட்டுள்ளது.