• India
```

உலகின் நம்பர் 1 பணக்காரர்...எலான் மஸ்க்கின் வெற்றியின் ரகசியம்...தெரிந்து கொள்ள வேண்டுமா...?

Elon Musk Success Secret

By Ramesh

Published on:  2025-02-04 17:31:43  |    11

Elon Musk Secret Of Success - நம்பர் 1 பணக்காரர் மற்றும் சிறந்த கண்டு பிடிப்பாளராக அறியப்படும் எலான் மஸ்க் அவர்களின் வெற்றி ரகசியம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பொதுவாக எலான் மஸ்க் அமெரிக்காவை சேர்ந்தவர் என அனைவருக்கும் தெரியும், ஆனால் அவர் தென் ஆப்பிரிக்காவில் பிறந்து, கனடாவில் படித்து, அமெரிக்காவில் குடியேறியவர் என்பது தான் உண்மை, சிறு வயதிலேயே கோடிங் மீது தீரா காதல் கொண்டவர், அவர் 12 வயதில் எழுத ஆரம்பித்த கோடிங் தான் இன்று அவரின் உலகின் நம்பர் 1 பணக்காரராக நிலை கொண்டு இருக்க செய்கிறது.

ஸ்பேஸ் எக்ஸ், ட்விட்டர், டெஸ்லா, Open AI, நியூராலிங் என பல நிறுவனங்களின் நிறுவனர் ஆக அறியப்படும் எலான் மஸ்க் அவர்களின் தற்போதைய நிகர சொத்து மதிப்பு மட்டும் 42,160 கோடி அமெரிக்க டாலராக அறியப்படுகிறது, ஒரு நிமிடத்திற்கு இந்திய மதிப்பில் 3.5 கோடி வரை எலான் மஸ்க் வருமானம் பார்த்து வருகிறாராம், சரி இந்த சாம்ராஜ்ஜியத்தின் ரகசியம் தான் என்ன?



பொதுவாக எலான் மஸ்க்கின் சாம்ராஜ்ஜியத்திற்கும் வளர்ச்சிக்கும் பெரிய ரகசியம் எல்லாம் இல்லை, அவரது ஆர்வம், புதுமைகளை கண்டுபிடிக்க அவர் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் முனைப்பு, ஒவ்வொரு நொடியும் தனது தொழில்களை அப்டேட் செய்து கொண்டே இருக்கும் அவரது திறன் என எல்லாமே அம்பலப்படுத்தப்பட்ட அனைவருக்கும் தெரிந்த நடவடிக்கைகள் தான்.

அவர் ஆரம்பித்த ஒவ்வொரு துறைகளிலும் தொடர்ந்து அதை எப்படி அப்டேட் செய்து கொண்டே இருக்கலாம் அதில் என்ன புதுமை செய்யலாம் என யோசிக்கும் விஞ்ஞானிகள் குழு இருக்கும், உலகமே முடியாது என வரையறுத்து வைத்து இருக்கும் விடயங்களை எல்லாம் கட்டவிழ்த்து அதை நிகழ்த்தி காட்டுவது தான் எலான் மஸ்க்கின் வெற்றியின் ரகசியமாக பார்க்கப்படுகிறது.