Adani Group Latest News Today -அதானி குழுமம் மற்றும் பங்குச் சந்தை பங்குகள் 7% வரை சரிவை சந்தித்துள்ளது.
இந்த வாரத்தின் முதல் நாளான திங்கள்கிழமையான இன்று, மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 409 புள்ளிகள் சரிவை சந்தித்து, 79,296 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 47 புள்ளிகள் சரிவை சந்தித்து 24,320 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது.முன்பாகவே பங்குச் சந்தைகள் சரிவுக்கு உள்ளாகும் எனக் கணிக்கப்பட்டு வைத்திருந்த நிலையில், அந்த நேர்மறையான போக்கைத் தொடர்ந்து சரிவு நிகழ்ந்தது.
கடந்த 10ஆம் தேதி ஹிண்டன்பர்க் வெளியிட்ட அறிக்கையில், "அதானி குழுமம் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரி புச் மேலும்,அவரது கணவர் தவல் புச் ஆகியோர் பங்குகளை கொண்டிருந்த நிலையில் மொரீஷியஸ் மற்றும் பெர்முடாவில் அமைந்துள்ள வினோத் அதானி தொடர்புடைய போலி நிறுவனங்களில் செபி தலைவர் மாதபி புரியும், அவரது கணவரும் பங்குகளை வைத்துவந்துள்ளனர்.
அதனால், இதன் காரணமாக அதானியின் சந்தேகத்துக்குரிய பங்குதார நிறுவனங்கள் மீது செபி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. செபி தலைவராக மாதபி பூரியின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழுமம் மீதான செபியின் விசாரணை முழுமையாக ஆய்வு செய்யப்பட வேண்டும்" என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்த ஹிண்டன்பர்க்கின் குற்றச்சாட்டுகளை மறுத்து, செபி தலைவர் மாதபி பூரியும் அவரது கணவரும் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளில் எந்த விதமான உண்மையும் இல்லை. எங்கள் வாழ்க்கையும் நிதி பரிமாற்றங்களும் முழுமையாக வெளிப்படையானவை. ஹிண்டன்பர்க் நிறுவனம் முன்பு வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, செபி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு பதிலடி கொடுக்க ஹிண்டன்பர்க் தற்போது இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது," என கூறியுள்ளனர்.
மேலும், "ஹிண்டன்பர்க் குறிப்பிடும் முதலீடு 2015-ஆம் ஆண்டில், நான் மற்றும் என் கணவர் சிங்கப்பூரில் வசித்துக் கொண்டிருந்த போது செய்தது. இது செபி அமைப்பில் இயக்குனராக இணைவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே நடைபெற்றது. முதலீட்டு அதிகாரியான அனில் அஹுஜா எனது கணவரின் பழைய நண்பர் என்பதால், அவர் மூலமாக முதலீடு செய்ய முடிவு எடுக்கப்பட்டது," என்று மாதபி புரி விளக்கம் கொடுத்துள்ளார்.
இந்த அறிக்கையின் பின்னணியில், திங்கள்கிழமை காலை பங்குச்சந்தை திறக்கும்போது, அதானி குழுமத்தின் பங்குகள் 7% வரை சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக, அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவை சந்தித்து வருவதால் பரபரப்பு நிலவுகிறது. மேலும் பங்கு வர்த்தகமும் வீழ்ச்சி அடைந்து வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னதாகவே, மேற்கத்திய பங்குச் சந்தைகளின் வீழ்ச்சி இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலித்தது. அதனுடைய பாதிப்பில் இருந்து மீளாத நிலையில், தற்போது அதானி குழுமத்தால் ஏற்பட்டுள்ள சரிவு, முதலீட்டாளர்களுக்கு பெரும் பயத்தை கொடுத்துள்ளது