Tata Air India Latest News -டாடா குழுமம் ஏர் இந்தியா வாங்கிய பின், வாடிக்கையாளர் சேவை மற்றும் விமான சேவையில் பல்வேறு மேம்பாடுகளை செய்துள்ளது. தற்போது, 4 விமான சேவை பிராண்டுகளை ஒருங்கிணைக்கும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதற்காக, ஏர் இந்தியா-விஸ்தாரா இணைப்பில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸின் முதலீட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Tata Air India Latest News -மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இயங்கி வந்த ஏர் இந்தியா விமான சேவை நிறுவனத்தை டாடா குழுமம் வாங்கிய பிறகு பல மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு, தற்போது வாடிக்கையாளர் சேவையும் விமான சேவையும் குறிப்பிடத்தகுந்த அளவில் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, டாடா குழுமத்தில் இயங்கிவரும் 4 விமான சேவை நிறுவனங்களையும் ஒருங்கிணைப்பது மிகவும் முக்கியமான பணியாக உள்ளது. இதில் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கும் பணிக்காக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) நிறுவனத்துக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை அன்னிய செலாவணி முதலீட்டுக்கான அனுமதி வழங்கியுள்ளது.
மேலும், டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கிய பிறகு, ஏர் இந்தியா, ஏர் இந்திய எக்ஸ்பிரஸ், ஏர் ஏசியா இந்தியா, விஸ்தாரா என நான்கு பிராண்டுகளை கொண்டுள்ளது. இதில், விஸ்தாரா என்பது டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லையன்ஸ் இணைந்து உருவாக்கிய நிறுவனமாகும்.
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், விஸ்தாராவில் 49% பங்குகளை கொண்டுள்ளது, 2022 நவம்பரில் ஏர் இந்தியா மற்றும் விஸ்தாராவை இணைக்கும் திட்டத்தை அறிவித்தது. டாடா குழுமம் விஸ்தாராவில் 51% பங்குகளை கொண்டுள்ளது.
இந்நிலையில், இந்த இணைப்பு நிறைவடைந்த பின், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விரிவாக்கப்பட்ட ஏர் இந்தியாவில் சுமார் 25.1% பங்குகளைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் கூடுதலாக முதலீடு செய்ய வேண்டியிருந்ததால், மத்திய அரசின் அனுமதி அவசியம் தேவையானதாக இருக்கிறது. ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைப்பிற்கான ஒப்புதல்களை இந்திய அரசின் விதிமுறைகள் படி பெற வேண்டும், ஏனெனில் டாடா குழுமம் ஏர் இந்தியாவை வாங்கிய போது சில முக்கியமான நிபந்தனைகள் விதிக்கப்பட்டு இருந்தது.
மேலும், இந்த முறைகளை கடந்து, தற்போது மத்திய அரசின் அன்னிய முதலீட்டு அனுமதி (FDI) கிடைத்துள்ளது. இந்த ஆண்டு முடிவுக்கு முன், ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா இணைந்து, முழுமையான உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவை நிறுவனமாக உருவாக உள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2