மேலும் 60 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்..என்ன செய்ய போகிறது இந்தியா..?

Day 15: An Additional 60 Aircraft Impacted by Bomb Threats - தொடர்ந்து விமான சேவைகளுக்கு மிரட்டல் வந்து கொண்டு இருக்கும் வேளையில் மேலும் 60 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது.
Day 15 Another 60 Aircrafts Affected By Bomb Threats

Day 15: An Additional 60 Aircraft Impacted by Bomb Threats - கடந்த சில தினங்களாக விமான சேவைகள் புரளியான வெடிகுண்டு மிரட்டல்களால் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது, இந்திய அரசும் யார் மிரட்டல் விடுக்கிறார்கள் என்ற தகவல் தெரியாமலும், இது குறித்து என்ன நடவடிக்கை எடுப்பது என்று தெரியாமலும் மிகவும் திணறி வருகிறது, பொதுவாக மிரட்டல் விடுப்பவர்கள் பேக் ஐடிகள் மூலம் சமூக வலைதளங்களில் மிரட்டல் கொடுப்பதால் யார் என்று கண்டு பிடிப்பதில் சிரமம் ஏற்படுகிறது.

நேற்று ஒரு நாளில் மட்டும் விஸ்தாரா நிறுவனத்தின் 20 விமானங்களுக்கும், இண்டிகோ நிறுவனத்தின் 21 விமானங்களுக்கும், ஏர் இந்தியா நிறுவனத்தின் 21 விமானங்களுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருக்கிறது, இதோடு 15 ஆவது நாளாக 450 க்கும் மேற்பட்ட விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு இருப்பதாக இந்திய விமான சேவை நிறுவனங்கள் தகவல் விடுத்து இருக்கின்றன.


புரளி என்றால் ஏன் பரிசோதனை செய்ய வேண்டும்?

இந்திய விமான நிறுவன சட்டங்களின்படி, ஒரு விமானத்திற்கு புரளியாக கூட வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டாலும் கூட, அந்த விமானத்தையும், விமானத்தில் இருக்கும் அத்துனை பேரையும், லக்கேஜ்களையும் முழுதாக பரிசோதித்த பிறகே அந்த விமானத்திற்கு பறக்க அனுமதி கொடுக்கப்பட வேண்டும், இது தான் விதி, இதனால் தான் புரளி என்று தெரிந்தாலும் கூட அத்துனை விமானங்களும் பரிசோதித்த பின்னரே பயணிக்க விடப்படுகின்றன.

ஓரு விமானத்தை முழுதாக பரிசோதனை செய்ய கிட்ட தட்ட 2 முதல் 3 மணி நேரம் வரை ஆகுவதால் விமான சேவை நிறுவனங்கள் இதனால் வெகுவாக பாதிக்கப்படுகின்றன, அந்த இரண்டு மூன்று மணி நேரங்களுக்குள்  விமானங்கள் இலக்கை அடைந்து திரும்பியே விட முடியும், பயணிகளும் வெகுவாக பாதிக்கப்படுவதால் தற்போது அவசர தேவைக்கு கூட பயணிகள் விமானத்தை பயன்படுத்த முடியாத நிலை இந்தியாவில் ஏற்பட்டு இருப்பது வருத்தத்திற்கு உரியதாக இருக்கிறது.