Bakeries Must Obtain Permission For Producing New Diwali Sweets - தீபாவளிக்கு புதிதாக செய்யும் ஸ்வீட்களுக்கு பேக்கரிகள் அனுமதி வாங்க வேண்டும் என உணவு பாதுகாப்பு துறை ஒரு அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.
Bakeries Must Obtain Permission For Producing New Diwali Sweets - தீபாவளி என்றாலே ஆடை, பட்டாசுக்கு பிறகு மிக முக்கியத்துவம் பெறுவது ஸ்வீட்கள் தான், பொதுவாக புது ஆடையை அணிந்து விட்டு, பட்டாசுகளை கொழுத்தி விட்டு, மற்றவர்களுக்கு ஸ்வீட்களை பகிர்வதில் தான் தீபாவளி என்பது முழுமையடைகிறது, எப்படி தீபாவளி என்றால் புது புது ஆடைகள், புது புது பட்டாசுகள் இடம் பெறுகிறதோ, அது போல பேக்கரிகளில் புது புது ஸ்வீட்கள் இடம் பெறும்.
அந்த வகையில் தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறை புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறது, அதாவது பேக்கரி கடைகள் தீபாவளிக்கு தங்களது பேக்கரிகளில் ஏதேனு புதிய ஸ்வீட்களை அறிமுகப்படுத்த விரும்பினால் நிச்சயம் அதற்கு தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையிடம் அனுமதி வாங்க வேண்டுமாம், அவ்வாறாக அனுமதி வாங்காமல் விற்கும் பட்சத்தில் பேக்கரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமாம்.
ஏன் திடீர் என்று இந்த விதிமுறை?
பெரும்பாலும் தீபாவளிக்கு அவசரம் அவசரமாக தயாரிக்கப்படும் ஸ்வீட்களில் கலப்படம் இருப்பதாகவும், அட்ராக்டிவ் கலர்களுக்காக ஒரு சில பாதிப்பிற்குரிய கெமிக்கல்களை பயன்படுத்துவதாகவும் ஒரு புகார் எழுந்து இருக்கிறது, இது ஒவ்வொரு பண்டிகை காலத்திலும் தொடர்ந்து நிகழ்வதால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கிலும் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பு கருதியும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
சரி, அந்த ஸ்வீட்டினால் மக்களுக்கு என்ன பாதிப்பு?
கலப்படம் மிக்க ஸ்வீட்களால், நிறத்திற்காக சேர்க்கப்படும் கலர்களால் அதை உண்ணும் வாடிக்கையாளர்களுக்கு வயிற்று உபாதைகள், குடல் பாதிப்புகள், கல்லீரல் பாதிப்புகள் மற்றும் புற்றுநோய் கூட வர வாய்ப்புகள் இருக்கிறதாம், இதனால் தான் இந்த நடவடிக்கையாம், இருந்தாலும் பேக்கரிகளில் வழக்கமாக விற்கப்படும் ஸ்வீட்களுக்கு எந்த பாதிப்பும் இல்லையாம், அதனை வழக்கம் போல் விற்க பேக்கரி உரிமையாளர்களுக்கு தடை இல்லையாம்.