TMB Mandate Cheque For All Transactions - தற்போது எல்லாம் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கிகளுக்குள் செல்லும் போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பு பலகையை பார்க்க முடிகிறது, அது என்ன என்று பார்க்கலாம்.
TMB Mandate Cheque For All Transactions - பொதுத்துறை வங்கிகள் எப்போதும் கூட்டம் கூட்டமாக அலை மோதுவதால், மக்கள் அவ்வப்போது தங்களது பணப்பரிமாற்றத்திற்கும், டெபாசிட்களுக்கும் தனியார் வங்கிகளை அணுகுவது உண்டு, அந்த வகையில் தூத்துக்குடியை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி என்ற தனியார் வங்கி தமிழகத்தில் பல மக்களின், நிறுவனர்களின், வியாபாரிகளின் நம்பகத்தன்மையை பெற்று இருக்கிறது.
ஆனால் தற்போதெல்லாம் அந்த வங்கிகளுக்குள் செல்லும் போது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எச்சரிக்கை அறிவிப்பை பார்க்க முடிகிறது. அதாவது வாடிக்கையாளர்கள் அனைவரும் செக் (காசோலை) வாங்கி வைத்திருக்க வேண்டுமாம், அவ்வாறாக இல்லையெனில் இனி எந்த ஒரு பணபரிமாற்றமும் செய்ய இயலாது என்பது தான் அந்த அறிவிப்பு, இந்த அறிவிப்பு தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை பயன்படுத்தி வரும் பல வாடிக்கையாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
பொதுவாகவே தென் மாவட்டத்தில் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியை பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களில் பலரும் கிராமங்களைச் சார்ந்தவர்கள் ஆக தான் இருக்கிறார்கள், அவர்கள் அவ்வப்போது மட்டுமே பணப்பரிமாற்றம் செய்பவர்கள், அவர்கள் செக் என்பது தேவையே இல்லை, அவ்வாறாக செக் ஒருவருக்கு தேவையே படாத போது அவர்களுக்குள் திணிப்பது ஏன் என பலரும் வங்கிகளிடம் கேள்வி எழுப்பி வருகின்றனர், எழுதப் படிக்க தெரியாதவர்களிடம் இதனால் எளிதாக செக் மோசடி செய்யவும் வாய்ப்புகள் இருக்கிறது.
கிராமங்களில் பலரும் ஏடிஎம் அட்டை பயன்படுத்த தெரியாத காரணத்தால், ஏடிஎம் அட்டையே வேண்டாம் என்று தான் ஆப்லைன் வசதியை பயன்படுத்தி வருகிறார்கள், அவர்களிடம் சென்று செக் இருந்தால் தான் இனி அனைத்து பரிமாற்றமும் என்று சொன்னால் அது எப்படி சாத்தியம் ஆகும். இதில் வேறு வருடத்திற்கு 20 காசோலைகள் மட்டுமே இலவசமாக வழங்கப்படும், மீதி காசோலைகளுக்கு சார்ஜ் பிடிப்பார்கள். இவ்வாறாக இருக்கும் போது எளிய மக்களிடம் காசோலையை கட்டாயப்படுத்துவது என்பது ஏற்கலாகாது.
" தென் மாவட்டங்களில் பலரின் நம்பிக்கைக்கு உகந்ததாக இருக்கும் தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி, காசோலையை வாடிக்கையாளர்களிடம் கட்டாயப்படுத்துவதை திரும்ப பெற வேண்டும், விருப்பப்பட்டவர்களும், தேவைப் படுபவர்களும் மட்டும் வாங்கிக் கொள்ளட்டும் என TMB வாடிக்கையாளர்கள் பலரும் வங்கிகளிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர் "