• India
```

Selvamagal Semippu Thittam -செல்வமகள்! சேமிப்பில் புதிய அப்டேட்..அக்டோபர் மாதம் முதல் நடைமுறைக்கு வருகிறது!!

Selvamagal Semippu Thittam | Selvamagal Savings Scheme

Selvamagal Semippu Thittam - நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சிறு சேமிப்புத் திட்டங்களுக்காக 6 புதிய வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

Selvamagal Semippu Thittam -மத்திய அரசு தபால் நிலைய சிறு சேமிப்பு திட்ட விதிகளை மாற்றி அமைத்து வருகிறது. முறைகேடாக திறக்கப்பட்ட கணக்குகளை சரிசெய்யும் விதிகள் புதிதாக நடைமுறைக்கு கொண்டுவரப்படுகிறது, மேலும் இந்த புதிய விதிகள் வருகிறன்ற அக்டோபர் மாதம் 1 ஆம் தேதி முதல் செயல்படுத்தப்பட உள்ளது.

இந்நிலையில், நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின் கீழ், சிறு சேமிப்புத் திட்டத்தின் புதிதாக 6 விதிகளை வெளியிடப்பட்டுள்ளது.6 புதிய விதிகள் பற்றி தற்பொழுது பார்க்கலாம்.

1.NSS 87 கணக்கு: 

ஏப்ரல் 2, 1990க்கு முன்பு கணக்கு தொடங்கப்பட்டு இருந்தால், முதல் கணக்கிற்கு நடைமுறையில் உள்ள திட்ட விகிதம் பொருந்தும். இரண்டாவது கணக்கில் இருப்பு வைப்புத் தொகைக்கு அஞ்சல் அலுவலக சேமிப்புக் கணக்கு விகிதங்களில் வட்டி கிடைக்கும்.

2. ஏப்ரல் 2, 1990க்குப் பிறகு தொடங்கப்பட்ட கணக்கு:

முதல் கணக்கிற்கு பழைய விகிதம் பொருந்தும், தற்போதுள்ள POSA விகிதங்கள் இரண்டாம் கணக்கிற்கு பொருந்தும். மூன்றாவது மற்றும் கூடுதல் கணக்குகளுக்கு வட்டி கிடையாது, அசல் தொகை மட்டுமே திருப்பிக்  கொடுப்படும்.

3. பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF):

மைனர் பெயரில் திறக்கப்பட்ட கணக்கு, மைனர் 18 வயதை அடையும் வரை அவர்ளுக்கு POSA வட்டி கிடைக்கும், அதன் பிறகு PPF விகிதம் பொருந்தும்.

4. பல PPF கணக்குகள்:

இதில், வருடாந்திர வரம்பிற்குள் இருக்கும் டெபாசிட் மட்டும் வட்டி பெறும், அதிகப்படியான தொகை 0 சதவீத வட்டியுடன் திருப்பித் தரப்படும்.

5.என்ஆர்ஐகள் மற்றும் PPF கணக்குகள்:

செப்டம்பர் 30, 2024 வரை POSA வட்டி கிடைக்கும், அதற்கு பிறகு 0 சதவீத வட்டி வழங்கப்படும்.PPF கணக்கு வைத்திருக்கும் என்ஆர்ஐ-க்கள் குடியிருப்பு விவரங்களை வழங்க தேவையில்லை.

6.சுகன்யா சம்ருத்தி கணக்கு:

தாத்தா, பாட்டி கணக்கை தொடங்கியிருந்தால், அது உயிரியல் பெற்றோருக்கு மாற்றப்பட வேண்டும். திட்ட வழிகாட்டுதல்களை மீறி தவறான வழிகளில் திறக்கப்பட்ட கூடுதல் கணக்குகள் மூடப்படும்.

மேலும், இந்த விதிகள் திட்டத்தினை முறையாகச் செயல்படுத்துவதற்கும், முறைகேடுகளை தவிர்கவும் உருவாக்கப்பட்டுள்ளன.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2