• India
```

SBI YONO: நான்கு க்ளிக்..2 நிமிடம்..உங்கள் பெர்சனல் லோன் ரெடி..!

SBI YONO Instant Loan In Just 2 Mints

By Ramesh

Published on:  2024-10-21 14:15:49  |    605

SBI YONO Instant Loan In Just 2 Mints - அவசர தேவைக்கு ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் YONO செயலி மூலம் 2 நிமிடத்தில் லோன் பெறுவது எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

SBI YONO Instant Loan In Just 2 Mints - இதற்கு குறைந்தபட்சம் மூன்று வருடங்களாவது எஸ்பிஐ வங்கியில் வரவு செலவு வைத்து இருக்க வேண்டும், சிபில் பாதிக்கும் வகையில் எந்த ஒரு வங்கி செயலிலும் ஈடுபட்டு இருக்க கூடாது, சரியான வகையில் முந்தைய லோன்களை முடித்து இருக்க வேண்டும், இந்த மூன்றும் சரியாக இருக்கும் பட்சத்தில் YONO செயலிகளே உங்களுக்கு பேனர்கள் மூலம் Pre Approved Loanகளை வழங்குகின்றன, உங்களுக்கு Pre Approved Loanகள் பேனர் விளம்பரங்களாக காண்பிக்கும் பட்சத்தில் நீங்கள் லோனுக்கு தகுதியானவர்.

ஒரு சிலருக்கு Pre Approved Personal Loan, Pre Approved Car Loans, Pre Approved Bike Loans உள்ளிட்டவைகளும் YONO செயலிக்குள் நுழைந்ததும், முன் பக்கத்திலேயே பேனர்களின் மூலம் காண்பிக்கப்படுகின்றன, அந்த செயலியில் அவ்வாறான விளம்பரங்கள் பேனர்கள் மூலம் உங்களுக்கு வருகின்ற பட்சத்தில் நீங்கள் அந்த லோனுக்கு தகுதியானவர்களாக கருதப்படுவீர்கள், YONO செயலி மூலம் எடுக்கப்படும் எந்த Instant லோனுக்கும்  எந்த ஆவணங்களும் தேவையில்லை, காத்திருப்பு நேரமும் அதிகபட்சம் 10 நிமிடங்கள் தான்.


சரி எப்படி லோனை பெறுவது?

1) முதலில் YONO செயலியின் முன் பக்கத்தில் காண்பிக்கப்படும் Pre Approved Loan பேனர்களை முதலில் க்ளிக் செய்ய வேண்டும், 

2) பேனரடை க்ளிக் செய்ததும் Apply Loan என்ற ஆப்சன் ஒன்று காமிக்கும் அதை க்ளிக் செய்யவும்,

3) அடுத்த ஸ்டேஜில் பான் கார்டு மற்றும் பிறந்த தேதி கேட்கும் அதை உள்ளிடவும்,

4) பின்னர் லோன் குறித்த தகவல்கள் காண்பிக்கும், உங்களுக்கு சான்ங்சன் ஆகி இருக்கும் லோன், அதற்கான வட்டி, கட்டி முடிப்பதற்கான கால அவகாசம் உள்ளிட்டவைகள் அனைத்தும் காண்பிக்கும்,

5) உங்களுக்கு அனைத்தும் ஒகே என்னும் பட்சத்தில் நெக்ஸ்ட் ஆப்சனை க்ளிக் செய்யலாம்,

6) எந்த தேதியில் EMI எடுக்க வேண்டும் என்ற தேதி கேட்கும், அதை உள்ளிடவும்,

7) அப்புறம் வழக்கம் போல Terms & Conditions, ஸ்க்ரோல் பண்ணிட்டு அக்சப்ட் கொடுத்துட்டு நெக்ஸ்ட், 

8) ஒரு கடவுச்சொல் உங்க மொபைல்க்கு வரும் அத உள்ளிட்டு நெக்ஸ்ட் கொடுத்திட்டா, ஒரிரு நிமிடத்தில் உங்களுக்கு நீங்க உள்ளிட்ட லோன் அமோண்ட் அக்கவுண்ட்ல கிரெடிட் ஆகிடும்,

9) முக்கியமா இந்த லோனுக்கு எந்த வித பிராசசிங் பீஸ்சும் கிடையாது.


எவ்வளவு லோன் அப்படிங்கிறது இங்க பிக்ஸடு அல்ல, ஒரு சிலருக்கு 8 இலட்சம் வரை இன்ஸ்டன்ட் லோன் வழங்கப்படுது, ஒரு சிலருக்கு 50,000 ரூபாய் வரை வழங்கப்படுது, உங்களுக்கு 8 இலட்சம் வரை காமிக்குது ஆனா உங்களுக்கு 5 இலட்சம் போதும் அப்படிங்கிற பட்சத்துல, நீங்க அதை 5 இலட்சமாக குறைச்சிக்கலாம், குறைச்சிக்கிறதுக்கும் ஆப்சன்ஸ் கொடுத்து இருக்காங்க, ஆனா லோன் அமோண்ட கூட்டிக்க முடியாது.

" ஏதாவது அவசர தேவைக்கு பாதுகாப்பற்ற லோன் செயலி மூலம் லோன் வாங்குறதுக்கு பதிலா அத விட குறைஞ்ச வட்டில உங்களோட எஸ்பிஐ அக்கவுண்ட்ல தரப்போ ஏன் நாம ஏன் வேற இடத்துக்கு அலையனும், ஆவணம் ஏதும் தேவையில்ல, கையெழுத்து ஏதும் தேவையில்ல, 2 நிமிசம், 4 க்ளிக், உங்க அக்கவுண்ட்ல பணம் உடனடியா வந்திடும், வெயிட் பண்ண கூட தேவை இல்ல "