• India
```

அய்யோ, நாங்க அபராதம் பிடிச்சு 4 வருஷம் ஆகுது, பார்வர்டு மெசேஜ்யை விட்டு தொலைங்க - SBI

SBI Forward Message | SBI Bank Scams

By Dharani S

Published on:  2024-09-30 11:47:57  |    224

SBI Forward Message -ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி, குறைந்த பட்ச இருப்பு தொகைக்கான அபராத தொகையை விட்டு 4 வருடங்கள் ஆகியும் கூட, அவர்களை பார்வர்டு மெசேஜாளர்கள் விட்ட பாடில்லை, சுமார் 5 வருடத்திற்கு முன்னதான பிடித்தம் செய்யப்பய்ய செய்தியை இன்னும் இணையதளங்களில் சீரியஸ் ஆக பரப்பிக் கொண்டு இருக்கிறார்களாம்.

2020 -க்கு முன்னதான வரையில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா நிறுவனம், வாடிக்கையாளர்களிடம் குறைந்த பட்ச இருப்புத் தொகை இல்லை என்றால் அபராதத் தொகை பிடித்தது என்னவோ உண்மை தான். ஆனால் 2020 யில் குறைந்த பட்ச இருப்பு தொகைக்கான அபராதத் தொகை என்பது முற்றிலும் அதிகாரப்பூர்வமாஜ நீக்கப்பட்டு விட்டது. ஆனால் ஒரு சில இணையவாசிகளோ, சுமார் 5 வருடங்களுக்கு முன்பு எஸ்பிஐ யின் பிடித்தம் குறித்து எழுதப்பட்ட ஆர்ட்டிக்கிளை இன்னும் பார்வர்டு செய்து கொண்டு இருக்கின்றனர்.


அதாவது அந்த பார்வர்டு மெசேஜில் குறிப்பாக இருப்பது என்னவென்றால், ‘எஸ்பிஐ நிறுவனம் மக்களின் சேமிப்பு பணங்களான ஆறாயிரம் கோடியை, குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லை என்று பிடித்தம் செய்து இருக்கிறது, இனிமேல் யாரும் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்துக் கொள்ள வேண்டாம்’ என்பது தான் அந்த மெசேஜ், ’இது எழுதி எத்துனை வருடங்கள் ஆகிறது என்பது எங்களுக்கும் தெரியவில்லை, உங்களுக்கும் தெரிய வாய்ப்பில்லை, ஆனால் எஸ்பிஐ 2020 யில் குறைந்த பட்ச இருப்பு தொகைக்கான அபராத தொகையை நீக்கி விட்டது அதையாவது குறைந்த பட்சம் தெரிந்து கொள்ளுங்கள்’, என எஸ்பிஐ தங்களை துரத்தி வரும் பார்வர்டு மெசேஜ்களுக்கு விளக்கம் அளித்து இருக்கிறது.

" வாட்சப் வந்ததில் இருந்தே பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது எல்லாம், தற்போது நடப்பவைகள் போல மக்களிடையே பரப்பப்பட்டு வருகின்றன, பகிரப்பட்டு வருகின்றன, அப்படியாக பரவிய ஒரு சேதி தான் இந்த ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா குறைந்த பட்ச இருப்பு தொகை இல்லாமல் பிடித்தம் செய்ததாக பரவிய சேதி "