• India
```

நாங்க போலீஸ் இல்ல, ஆனாலும் நடவடிக்கை பக்காவா இருக்கும் - ரிசர்வ் வங்கி ஆளுநர்

RBI Ban Four Financial Firms From Loan Sanctioning

By Ramesh

Published on:  2024-10-18 13:21:45  |    286

RBI Ban Four Financial Firms - லோன் விடயத்தில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த 4 முக்கிய நிறுவனங்கள் மீது ரிசர்வ் வங்கியின் ஆளுநர் ஷக்தி காந்த தாஸ் நடவடிக்கை எடுத்து இருக்கிறார்.

RBI Ban Four Financial Firms - கடன் விடயங்கள், வட்டி விதிமுறைகள் மற்றும் ரிசர்வ் வங்கியின் சட்டவிதிமுறைகள் உள்ளிட்டவைகளை மீறியதாக கூறி ரிசர்வ் வங்கியின் கீழ் செயல்பட்டு வரும் இந்தியாவின் முக்கிய நான்கு நிதி நிறுவனங்களின் மீது நடவடிக்கை விதிக்கப்பட்டு இருக்கிறது. இனி அந்த நிறுவனங்கள் எந்த ஒரு வாடிக்கையாளர்களுக்கும் புதிய லோன் ஏதும் கொடுக்க முடியாது, புதியதாக லோன் ஏதையும் பரிசீலனை செய்ய முடியாது.

சரி, அந்த நான்கு நிதி நிறுவனங்கள் என்ன என்ன?

1) மணப்புரம் நிதி நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆசிர்வாத் மைக்ரோ பைனான்ஸ்

2) ஆவிஸ்கார் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் ஆரோஹன் பைனான்சியல் சர்வீஸ்

3) DMI குரூப்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் DMI பைனான்ஸ்

4) நவி குரூப்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்பட்டு வரும் நவி பின்சர்வ்


சரி, ஏன் இந்த நான்கு நிதி நிறுவனத்தின் மீது நடவடிக்கை?

இந்த நான்கு நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கடன் கொள்கைகளையும், ரிசர்வ் வங்கியின் ஒழுங்குமுறை வழிகாட்டுதல்களையும் பின்பற்றாமல் இஸ்டத்திற்கு வட்டி வசூலித்து வந்தது. இது சம்மந்தமாக பல புகார்கள் வந்ததும் ரிசர்வ் வங்கி இந்த நான்கு நிறுவனங்களையும் உன்னிப்பாக கவனித்து வந்தது, பல மாதங்களாக இந்த நிறுவனங்களின் வரவு, செலவு, கடன் கொள்கைகளை கவனித்ததன் மூலம் இவர்கள் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வந்தது அம்பலமானது, அதனால் தான் இந்த நடவடிக்கை.

சரி, இது குறித்து ரிசர்வ் வங்கியின் ஆளுநர் கூறுவது என்ன?

" நாங்கள் ஒன்றும் போலீஸ் இல்லை, ஆனால் எங்களைச் சுற்றி நடக்கும் விதிமீறல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறோம், எப்போது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும், நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரத்தில் சரியாக எடுப்போம் " என கூறி இருக்கிறார். நடவடிக்கை நடவடிக்கை தான், ஆனால் இந்த நிதி நிறுவனங்கள் இதற்கு முன்னதாக கொடுத்த கடன்களை வசூலிப்பதற்கு எந்த தடையும் இல்லை, ஆனால் ஒழுங்குமுறைகளை சரியாக பின்பற்ற வேண்டும் என ரிசர்வ் வங்கி எச்சரித்து இருக்கிறது.