• India
```

வங்கி பக்கமே போக வேண்டாம்...இனி கூட்டுறவு வங்கிகளிலும் செயலிகள் மூலம் கடன்..!

Kooturavu App Loan Details Tamil

By Ramesh

Published on:  2024-10-17 03:12:11  |    279

Kooturavu App Loan Details Tamil - வங்கிகளுக்கு நேரடியாக செல்லாமலே செயலிகள் மூலம் லோன் பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி இருக்கிறது மாவட்ட மைய கூட்டுறவு வங்கி (DCCB).

Kooturavu App Loan Details Tamil - பொது மக்களை ஈர்க்கும் நோக்கில் கடந்த ஒரிரு வருடங்களாக கூட்டுறவு வங்கிகள் பல திட்டங்களை அமல்படுத்தி வருகின்றன, வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பல சேமிப்பு திட்டங்களை செயல்படுத்தி வந்த நிலையில், தற்போது செயலிகள் மூலம் லோன் பெறும் புதிய வசதி ஒன்றையும் அறிமுப்படுத்தப்பட்டு இருக்கிறதாம், தற்போதைக்கு இத்திட்டத்திற்காக ஒரு இலட்சம் கோடி வரை ஒதுக்கப்பட்டு இருப்பதாக தகவல்.

சரி, எவ்வளவு கடன்கள் கிடைக்கும்?

1) தனி நபர் கடன் 15 இலட்சங்கள் வரை, 9.5 சதவிகித வட்டியுடன், 10 வருடங்களில் முடிக்கும் வகையில்,

2) வீட்டுக் கடன் 75 இலட்சங்கள் வரை, 8.5 சதவிகித வட்டியுடன், 20 வருடங்களில் முடிக்கும் வகையில்.

3) நகைக்கடனுக்கு 20 இலட்சங்கள் வரை, 9.5 சதவிகித வட்டி, 1 வருட காலம்.

4) சிறு குறு தொழில் முனைவோர்களுக்கு 20 இலட்சங்கள் வரை, 10 சதவிகித வட்டி, 10 வருடங்களில் முடிக்கும் வகையில்.

5) பெண் தொழில் முனைவோர்களுக்கு 10 இலட்சங்கள் வரை, 10 சதவிகித வட்டி, 10 வருடங்களில் முடிக்கும் வகையில்.

6) பயிர்க்கடனுக்கு 3 இலட்சங்கள் வரை வட்டியில்லா கடன், 12 முதல் 15 மாதங்களுக்குள் முடிக்கும் வகையில், அதற்கு மேல் கால அவகாசம் தேவைப்பட்டால் 7.5 சதவிகிதம் வட்டி.

7) பயிர்க்கடனுக்கு 3 இலட்சங்களுக்கு மேலும் தேவைப்பட்டால், 7.5 சதவிகிதம் வட்டி


சரி, என்ன செயலி மூலமாக லோனுக்கு பதிவு செய்ய முடியும்?

உங்களுக்கு முதலில் கூட்டுறவு வங்கிகளில் வங்கி கணக்கு இருக்க வேண்டும், பின்னர் ப்ளே ஸ்டோரில் 'கூட்டுறவு' என்றே ஒரு செயலி இருக்கிறது, அதை பதிவிறக்கம் செய்து கொண்டு, லோன் அப்ளிகேசன் என்றதொரு ஆப்சன் இருக்கும், அதை க்ளிக் செய்து அதில் கேட்கும் தகவல்களை எல்லாம் உள்ளிடும் பட்சத்தில், கேட்கு ஆவணங்களை எல்லாம் பதிவு செய்யும் பட்சத்தில் உங்களது லோன் அப்ளிகேசன் வங்கிக்கு இணையம் மூலமாக சென்று விடும்,

" நீங்கள் அப்லோடு செய்த ஆவணங்கள் எல்லாம் சரியாக இருக்கும் பட்சத்தில், உங்களது லோனுக்கான பதிவு வங்கிகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, லோன் தொகை உடனடியாக பிராசஸ் செய்யப்படும் "