Aadithyan Rajesh Youngest CEO Of India - இந்தியாவின் இளம் தலைமைச் செயல் அதிகாரியான ஆதித்யன் ராஜேஷ் குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
ஆதித்யன் ராஜேஷ், கேரளாவை பூர்விகமாக கொண்டவர், அவருக்கு 5 வயது இருக்கும் போதே மொபைல் மற்றும் லேப்டாப்பின் மீது பெரிய ஆர்வம் இருந்து இருக்கிறது, எப்போதும் யூடியூபில் ஏதாவது ஒரு டெக் வீடியோவை பார்த்தே வளர்ந்து இருக்கிறார், செயலிகள் உருவாக்கம், கேம்கள் டிசைன், இணையதள உருவாக்கம் என இதை எல்லாம் 9 வயதிலே இவர் தெரிந்து கொண்டார்,
பின்னர் தனது ஒன்பது வயதில் தன்னுடைய அன்றைய திறனை கொண்டு தனது முதல் செயலியை வடிவமைத்து இருக்கிறார், இவரது குடும்பம் துபாய்க்கு மூவ் ஆகி விட்டதால் இணையதளங்கள் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஆர்டர்களை பெற்றுக் கொண்டு வெப்சைட் டிசைன், லாகோ டிசைன் போன்றவற்றை செய்து கொடுத்து இருக்கிறார்,
இது போக ஆதித்யன் ராஜேஷ் தனது 13 வயதில் Trinet Solutions என்ற பெயரில் ஒரு தொழில்நுட்ப நிறுவனத்தையும் தோற்றுவித்து, இந்தியாவின் இளம் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஆக வலம் வந்தார், சும்மா பேச்சுக்கு நிறுவனம் என்று அமைக்காமல், 12 கிளையன்டுகளின் பிராஜக்டுகளை முறையாக பெற்று அதை வெற்றிகரமாக முடித்தும் கொடுத்து இருக்கிறார்,
தான் படிக்கும் பள்ளிக்கு ஒரு கிளாஸ் மேனேஜ்மெண்ட் செயலியும் ஆதித்யன் வடிவமைத்து கொடுத்து இருக்கிறார், இளம் வயது என்பதால் இவரது நிறுவனம் ரிஜிஸ்டர் செய்யப்படவில்லை, ஆனாலும் கூட தொடர்ந்து தனது பிராஜக்டுகளை திறமையாக கையாண்டு வருகிறார், 'A Craze' என்ற பெயரில் ஒரு யூடியூப் தளமும் அமைத்து அதில் தனது டெக் அறிவை வெளிப்படுத்தி வருகிறார்.
" தொழில் முனைவிற்கு அனுபவம் தான் அவசியம் என்ற கோட்பாடுகளை எல்லாம் உடைத்து இந்தியாவின் இளம் தொழில்நுட்ப நிறுவனர் ஆகி இருக்கும் ஆதித்யன் ராஜேஷ் இளம் தொழில் முனைவோர்களுக்கு சிறந்த எடுத்துகாட்டாய் அமைகிறார் "