Schemes For Women in India-ஆண்களுக்கு நிகராக தற்போது பெண்களும் தொழில்துறையில் சாதித்து வருகின்றனர், இதனை முன் நிறுத்தி ஒன்றிய அரசு, பெண்களுக்கும் பல கடன் திட்டங்களை வழங்கி வருகிறது, அப்படி ஒரு அசத்தலான திட்டம் குறித்து தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
சரி அப்படி என்ன தான் திட்டம் இது?
பொதுவாகவே சாதாரண பெண் தொழில் முனைவோர்கள், ஒரு தொழில் துவங்க வேண்டுமெனில் முதலில் யோசிப்பதும் தேர்ந்து எடுப்பதும் என்னவோ சமையல் துறையை தான், அவர்களுக்கு, அந்த துறை தான் அத்துப்பிடியான விடயமாகவும் துறையாகவும் இருக்கும், அவ்வாறாக சமையலை ஒரு தொழிலாக துவங்க நினைக்கும் பெண் தொழில் முனைவோர்களுக்காகவே, ஒன்றிய அரசு புதிய அசத்தலான திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
அத்திட்டத்தின் பெயர் தான் அன்னபூர்ணா யோஜனா, ஏன் இந்த பெயர் என்றால், அன்னபூரணி என்பது பொதுவாகவே உணவின் கடவுளாக அறியப்படுகிறார், இத்திட்டம் என்பதும் உணவு சம்பந்தப்பட்ட தொழில் துவங்கும் பெண் தொழில் முனைவோர்களுக்கு கடன் வழங்கும் திட்டம் என்பதால், இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசு, அன்னபூர்ணா யோஜனா என்றே பெயரிட்டு இருக்கிறது.
அன்னபூர்ணா திட்டம் என்பது என்ன?
அதாவது அன்ன பூர்ணா திட்டம் என்பது சமையல் தொழிலை துவங்க நினைக்கும் பெண் தொழில் முனைவோர்களுக்கு, பொதுத்துறை வங்கிகளின் மூலம் ரூபாய் 50,000 கடன் அளிக்கும் ஒரு திட்டம் ஆகும், இத்திட்டத்தின் மூலம் பெண் தொழில் முனைவோர்கள் அவர்களுக்கு ஹோட்டலுக்கு தேவையான சமையல் பாத்திரங்கள், அடுப்புகள், சேர்கள் மற்றும் இதர பொருள்களை இந்த கடன் தொகையின் மூலம் வாங்கி கொள்ள இயலும்.
இந்த கடனை திரும்ப செலுத்த 36 மாத காலங்கள் வரை அவகாசம் அளிக்கப்படுகிறது, அதிலும் இந்த கடனை பெற்ற வாடிக்கையாளர்கள் முதல் தவணையை செலுத்த வேண்டிய அவசியம் இல்லை, அதாவது இரண்டாவது தவணையில் இருந்து மட்டும் கடனை திருப்பி செலுத்தினால் போதும். ஒரிரு மாதங்களுக்கே முன்பே வெளியான இத்திட்டம் இன்னும் செயலில் தான் இருக்கிறது.
சரி, அன்னபூர்ணா திட்டத்தில் எப்படி சேர வேண்டும்?
நீங்கள் வங்கி கணக்கு வைத்து இருக்கும் பொதுத்துறை வங்கிக்கு நேரடியாக சென்று, உங்களது திட்டம் குறித்து முதலில் விவரிக்க வேண்டும். பின்னர், அவர்கள் நேரடியாக நீங்கள் ஹோட்டல் வைக்க போகும் இடத்தை முதலில் நேரில் வந்து ஆய்வு செய்வார்கள், ஆய்வு முடிந்த பின்னர் உங்களிடம் கடைக்கான ஆவணம், உங்களுடைய ஆதார், பான் எண் உள்ளிட்டவைகள் மூலம் அன்னபூர்ணா திட்டத்திற்கு பதிவு செய்வார்கள்.
பதிவு செய்த பின்னர், குறைந்தபட்சம் மூன்று முதல் ஆறு நாட்களில் உங்களது அனைத்து ஆவணங்களும் சரி பார்க்கப்பட்டு, ஐம்பதாயிரம் கடன் தொகை ஆனது உங்களது வங்கி கணக்கில் நேரடியாகவே வரவு வைக்கப்படும், ஆவணங்கள் மிக மிகச்சரியாக இருக்கும் பட்சத்தில் இரண்டு நாட்களுக்குள்ளாகவே கூட சிலருக்கும் கடன் தொகை அக்கவுண்ட்டில் கிரெடிட் ஆகிவிடுகிறது.