• India
```

20 லட்சமாக அதிகரித்த முத்ரா லோன்.. இதை எப்படி வாங்குவது!

Mudra Loan Details In Tamil | Mudra Loan Scheme Details

By admin

Published on:  2024-08-21 10:44:29  |    1636

Mudra Loan Details In Tamil -முத்ரா திட்டத்தில் ரூபாய்.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கி வந்த மத்திய அரசு.இப்பொழுது அதன் மதிப்பை ரூபாய். 20 லட்சமாக அதிகப்படுத்தி இருக்கிறது.

Mudra Loan Details In Tamil -பிரதான் மந்திரி முத்ரா யோஜனா , MUDRA என்பது ( Micro Units Development and Refinance Agency ) ஆகும். இந்த திட்டம் 2015-ல் மத்திய அரசால் கொண்டுவரப்பட்டது. முத்ரா திட்டத்தில் ரூபாய்.10 லட்சம் வரை கடன் உதவி வழங்கி வந்த மத்திய அரசு.இப்பொழுது அதன் மதிப்பை ரூபாய். 20 லட்சமாக அதிகப்படுத்தி இருக்கிறது. 

முத்ரா லோன் என்பது சுய தொழில்கள் மற்றும் விவசாயம் சார்ந்து செய்யப்படும் தொழில்களுக்கும், ஏற்கனவே செய்து வரும் தொழிலை மேலும் விரிவுபடுத்துபவதற்கும், இந்த லோன் கொடுக்கப்படுகிறது. 

எடுத்துக்காட்டாக, சிறு தொழில் முனைவோருக்கான முதலீடு அல்லது  கடை, வியாபார கடைகள் தொடங்குதல் அல்லது கைத்தறி மற்றும் கைத்தொழில் வளர்ச்சி மற்றும் வாகனம் வாங்குதல் (ஆட்டோ, மினி வான், சிறிய லாரி).




முத்ரா லோன் அடிப்படையில், ரூபாய்.20 லட்சம் யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று கீழ் வருமாறு பார்க்கலாம். அதாவது,

முத்ரா லோன்-ல் மூன்று வகையான திட்டங்கள் இருக்கிறது. அது shishu, Kishor,  Tarun என்ற பிரிவுகளை கொண்டுள்ளது. மூன்று பிரிவுகளின் அடிப்படையில் தான் முத்ரா லோன் கொடுக்கப்படுகிறது.

1 . shishu - ரூபாய். 50,000 வரை 

2 . Kishor - ரூபாய். 50,000 முதல் ரூபாய். 5 லட்சம் வரை 

3 . Tarun  -  ரூபாய். 5 லட்சம்  முதல் ரூபாய்.10 லட்சம் வரை 

 சிஷு (Shishu) :இத்திட்டத்தின் வழியே, புதியதாக தொடங்கும் தொழில்களுக்கு ரூ.50,000 வரை கடன் உதவி வழங்கப்படுகிறது. ஆரம்ப நிலை தொழில் முனைவோர் சிறிய அளவிலான முதலீட்டுக்காக இந்தத் திட்டத்தின் கீழ் கடன் பெறலாம்.

 கிஷோர் (Kishore) :இத்திட்டத்தின் அடிப்படையில்,  ரூ.50,000 முதல் ரூ.5 லட்சம் வரை கடன் கொடுக்கப்படுகிறது. இது தொழிலை மேலும் விரிவாக்க வழங்கப்படுகிறது.


தருண் (Tarun): இத்திட்டத்தின் வழியே, ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. தொழிலை மேம்படுத்துவதற்கான முதல் நிலையாக இதைப் பயன்படுத்தலாம்.முன்னதாக Tarun வகையில் ரூபாய்.10 லட்சம் லோன் வாங்கியவர்கள். 10 லட்சத்தை திருப்பி செலுத்தியிருந்தால் மட்டுமே ரூபாய்.20 லட்சம் லோன் வாங்க முடியும். மற்றவர்களுக்கு ரூபாய்.20 லட்சம் மதிப்புள்ள லோன் கிடையாது.  

புதியதாக முத்ரா லோன் வாங்க விரும்புபவர்களுக்கு, ருபாய் 10, வரையில் தான் கடன் உதவி கிடைக்கும்.

முத்ரா லோன் வாங்குவதற்கு வங்கியில் தேவைப்படும் DOCUMENTS,

ID PROOF :

ADHAR CARD 

PAN CARD  

ADDRESS PROOF :

RATION CARD 

RENTAL AGREEMENT 

LAST 6 MONTHS BANK STATEMENT 

LAST 3 YEARS IT FILE 

மேலும், PROJECT REPORT  துவங்க போகும் தொழிலைப்பற்றிய முறையான திட்ட விவரங்களை சரியாக வைக்க வேண்டும். பிறகு அதை வங்கியின் மேலாளர் சரி பார்த்து அங்கீகரிக்கப்பட்டது என்று தேர்வு செய்த பிறகே முத்ரா லோன் கிடைக்கும்.