• India
```

டாப் 5 UPI செயலிகள்...தொடர்ந்து முதல் இடத்தில் PhonePe...!

Top 5 UPI Apps In September 2024

By Ramesh

Published on:  2024-10-14 06:59:58  |    426

Top 5 UPI Apps In September 2024 - இந்தியாவின் பணபரிவர்த்தனை ஒழுங்குமுறை ஆணையம் கடந்த செப்டம்பர் மாத நிலவரத்தின் படி, பண பரிவர்த்தனையின் அடிப்படையில், இந்தியாவின் டாப் 5 UPI செயலிகள் என்ன என்ன என்பதை வெளியிட்டு இருக்கிறது.

Top 5 UPI Apps In September 2024 - கடந்த 2016 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த கட்டண இடைமுகம் (UPI), ஆரம்ப காலக்கட்டத்திலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது, UPI அறிமுகம், பணவரித்தனையை சாதாரண மக்களும் பயன்படுத்தும் வகையில் மிக மிக எளிதாக்கியது, இதனால் எளிய மக்களையும் சென்றடைந்த இந்த UPI குறிப்பிட்ட சில மாதங்களிலேயே தேசம் முழுக்க விஸ்வரூபம் எடுத்தது.

கடந்த செப்டம்பரில் மட்டும் UPI மூலமாக 15 பில்லியன் பண பரிவர்த்தனைகள் இந்தியாவில் நடைபெற்று இருக்கின்றன, இது UPI பரிவர்த்தனையில் ஒரு புதிய உச்சமாக பார்க்கப்படுகிறது. ஒட்டு மொத்த பண பரிவர்த்தனையில் PhonePe மட்டுமே கிட்ட தட்ட 50 சதவிகிதத்தை தன்னகத்தே கொண்டு இருக்கிறது. ஒட்டு மொத்தமாக நடை பெற்ற 15 பில்லியன் பரிவர்த்தனையில், PhonePe மூலம் நடைபெற்ற பரிவர்த்தனைகள் மட்டும் 7.22 பில்லியன் ஆக இருக்கிறது.


அதாவது ஒட்டு மொத்த பரிவர்த்தனையில் 48.3 சதவிகித பரிவர்த்தனைகள் PhonePe மூலம் நடைபெற்று இருக்கிறது, மதிப்பாக பார்க்கும் போது கிட்ட தட்ட 10.31 இலட்சம் கோடிகள் அளவிலான பரிவர்த்தனைகள் PhonePe மூலம் நடைபெற்று இருக்கின்றன, அதற்கு அடுத்தபடியாக Google Pay மூலம் 37.4 சதவிகித பண பரிவர்த்தனைகள் நடைபெற்று இருக்கிறது, மதிப்பாக பார்க்கும் போது கிட்ட தட்ட 7.46 இலட்சம் கோடிகள் அளவிலான பண பரிவர்த்தனைகள் Google Pay மூலம் நடைபெற்று இருக்கிறது.

அதற்கு அடுத்த படியாக PayTM யில் 7.21 சதவிகித பரிவர்த்தனைகள் நடைபெற்று இருக்கிறது, CRED செயலி மூலம் 47.98 ஆயிரம் கோடிகள் பண பரிவர்த்தனையும், Navi செயலி மூலம் 6,549 கோடி பணபரிவர்த்தனையும் நடைபெற்று இருக்கிறது, PhonePe வை பொறுத்தவரை UPI பணபரிமாற்றத்தில் முதல் இடத்தில் இருந்தாலும் கூட, தனது முன்னதான ஒட்டு மொத்த பண பரிமாற்றத்தில் 50 சதவிகிதமாக இருந்தது, தற்போது குறைந்து, 48 சதவிகிதமாகி இருக்கிறது.


Google Pay, Navi உள்ளிட்ட செயலிகள் பண பரிவர்த்தனையில் ஒரு குறிப்பிடத்தக்க  முன்னேற்றத்தைக் கண்டு இருக்கின்றன,Flipkart நிறுவனத்தின் Super Money மூலம் செய்யப்படும் பண பரிவர்த்தனைகள், கடந்த மாதத்தை விட 120 சதவிகிதம் அதிகரித்து இருக்கிறது, தற்போதைக்கு அதிகபட்ச பரிவர்த்தனையில் முதலிடத்தில் PhonePe, இரண்டாம் இடத்தில் Google Pay, மூன்றாம் இடத்தில் PayTM, நான்காம் இடத்தில் CRED, ஐந்தாம் இடத்தில் Navi உள்ளிட்ட செயலிகள் இருக்கின்றன.

" நாள் ஒன்றுக்கு 1 பில்லியன் பரிவர்த்தனைகள், அது தான் UPI பரிவர்த்தனையில் அடுத்த இலக்கு என ஒன்றிய அரசு நிர்ணயித்து இருக்கிறது, இந்த இலக்கு 2026-27 கால ஆண்டுகளில் சாத்தியப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது "