• India
```

முக்கிய பொறுப்பில் அம்பானியின் மகன்கள்..ரிலையன்ஸ் பவர்..கடன் இல்லாத நிலை அடைந்தது!

Reliance Power Anil Ambani | Reliance Anil Ambani​

Reliance Power Anil Ambani​ -கடந்த சில ஆண்டுகளாக கடனில் தத்தளித்து வந்த அனில் அம்பானி, தற்போது தனது ரிலையன்ஸ் நிறுவனங்களை மீட்டெடுக்கின்றார்.மேலும் பங்குகள் 60 சதவீதம் வரை உயர்ந்துள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக கடனில் தத்தளித்து வந்த அனில் அம்பானி, தொழில்முறை ரீதியாக கடும் பின்னடைவை எதிர்கொண்டுள்ளார். 2008-ல் உலகின் 6வது பெரும் கோடீஸ்வரராக இருந்த அவர், தற்போது தனது பழைய அந்தஸ்தைப் பெற முயற்சி செய்து வருகிறார்.

அனில் அம்பானியின் ரிலையன்ஸ் பவர் நிறுவனம் கடன் இல்லாத நிலையை அடைந்துள்ளதோடு, ரிலையன்ஸ் இன்ஃப்ரா தனது கடனை 87 சதவீதம் வரை குறைத்துள்ளது. இரண்டு நிறுவனங்களும் சமீபத்தில் லாபத்தில் இயங்கத் தொடங்கிய நிலையில், பங்குகள் 60 சதவீதம் வரை அதிகரித்துள்ளன.


இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் பங்குகள் உயர்வுக்கான காரணம், நிறுவனத்திற்கான நல்ல செய்திகளாகும், இது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிக்க செய்துள்ளது. மேலும், மேற்கு வங்காளத்தில் தாமோதர் கார்ப்பரேஷன் நிறுவனத்துடன் நடைபெற்ற தகராறு தொடர்பான ரூ.780 கோடி மதிப்பிலான நடுவர் தீர்ப்பை கல்கத்தா உயர் நீதிமன்றம் உறுதிசெய்துள்ளது.

அனில் அம்பானியின் இரு மகன்கள் முக்கிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்ட பிறகு, ரிலையன்ஸ் குழுமம் புதிய திட்டங்களை உருவாக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், ரிலையன்ஸ் குழுமம் பூடானில் 1,270 மெகாவாட் சூரிய மற்றும் நீர்மின் திட்டங்களை அமைப்பதாக அறிவித்துள்ளது.