Bigg Boss Tamil Vijay TV Revenue - பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு விஜய் டிவி ஒட்டு மொத்தமாக 150 கோடி செலவழித்து, அதன் மூலம் ரூபாய் 1500 கோடிக்கும் மேல் வருமானம் எடுப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது, அது குறித்து பார்க்கலாம்.
Bigg Boss Tamil Vijay TV Revenue - டச்சு நாட்டில் பிரபலமான ரியாலிட்டி ஷோவாக அறியப்படும் பிக் பிரதர் என்பதன் இந்திய வெர்சன் தான் பிக்பாஸ், எண்டிமோல் ஷைன் நிறுவனத்தால் ஆரம்பிக்கப்பட்டு தற்போது பனிஜய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு வரும் பிக்பாஸ், முதலில் ஹிந்தியில் மட்டும் தான் ஒளிபரப்பானது, தற்போது கன்னடம், பெங்காளி, தெலுங்கு, மலையாளம், தமிழ் உள்ளிட்ட மொழிகளிலும் தயாரிக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது.
சரி, பிக்பாஸ்சால் விஜய் டிவிக்கு என்ன இலாபம்?
பிக்பாஸ்சிற்கு உலகளாவிய அளவில் இருக்கும் வரவேற்பு தான் விஜய் டிவியின் இலாப மூலதனம், பிரபலமான ரியாலிட்டி ஷோ என்பதால் பெரும்பாலான கார்பரேட் நிறுவனங்கள், தங்களது நிறுவனத்தை பிக்பாஸ்சில் விளம்பரப்படுத்த கோடிக்கணக்கில் கொட்டி தீர்க்கின்றனர். பிக்பாஸ் இடையே ஒளிபரப்பப்படும் ஒவ்வொரு விளம்பரத்திற்கும் உற்பத்தி நிறுவனங்கள், விஜய் டெலிவிஷனுக்கு தினமும் இலட்சங்களை கொட்டி தீர்க்கிறதாம்.
ஷோ, மேடை, ஹாஸ்ட், ஊழியர்கள் சம்பளம், வீடு, தயாரிப்பாளர்களுக்கான சம்பளம், போட்டியாளர்களுக்கான சம்பளம் என ஒட்டு மொத்தமாக ஒரு 200 கோடி விஜய் டிவி செலவழித்தாலும் கூட, அந்த செலவைக் காட்டிலும் குறைந்த பட்சம் ஒரு 7 முதம் 8 மடங்கு இலாபம் பார்த்து விடுமாம், ஷோ ஹிட் எனில் இலாபம் அதிகமாகுமாம், ஷோ டவுன் எனில் இலாபம் கம்மியாகுமாம், மற்றபடி நஷ்டத்திற்கு எல்லாம் வாய்ப்பே இல்லையாம்.
சரி, ஹிந்தி பிக்பாஸ் எப்படி?
ஹிந்தியில் பிக்பாஸ் 18 ஆவது சீசனை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது, அங்கு சல்மான்கானின் சம்பளம் மட்டுமே 250 கோடியை தாண்டுமாம், அப்படி என்றால் ஹிந்தி பிக்பாஸ்சின் வசூலை கொஞ்சம் எண்ணி பாருங்கள், தமிழில் இதுவரை பிக்பாஸ் ஹாஸ்ட் ஆக செயல்பட்டு வந்த கமல்ஹாசன் அவர்களுக்கு கடைசியாக 120 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டது, தற்போது பிக்பாஸ் தமிழ் எட்டாவது சீசனை தொகுத்து வழங்கும் விஜய் சேதுபதி அவர்களுக்கு 60 கோடி சம்பளம் வழங்கப்படுகிறது.
பான் இந்தியா திரைப்படங்களை விட ஒரு ரியாலிட்டி ஷோ கலெக்சனை அள்ளுகிறது என்றால் நம்பமுடியவில்லை அல்லவா, உண்மை தான், இதை விட ஷாக்கான இன்னொரு விடயமும் இருக்கிறது, தமிழில் வெளியான ரப்பர் பந்து கலெக்சனை விட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலின் கலெக்சன் அதிகமாம், விஜய் டிவி ஏன் மற்ற டிவிக்களை விட ஸ்டாண்டர்டு ஆக தெரிகிறதென்றால் அது புது புது படங்களை கோடிகள் கொடுத்து வாங்க முயற்சிக்கவில்லை, புது புது ஐடியாக்களை தோற்றுவிக்கிறது, அந்த ஐடியாக்களை நிகழ்ச்சிகளாக்கி அதையே கோடிகள் ஆக்குகிறது.
" சின்ன திரையோ, பெரிய திரையோ, சின்ன தொழிலோ, பெரிய தொழிலோ எதிலும் ஸ்மார்ட்டாக செயல்பட்டால் அதற்கு ஏற்றவாறு ஸ்மார்ட்டான அதீதமான பலனும் கூடவே கிடைக்கும் "