Jio Diwali Offer -ரிலையன்ஸ் ஜியோ தீபாவளி தமக்கா ஆபரை அறிமுகம் செய்துள்ளது, இது JioFiber பயனர்களுக்கான புதிய திட்டமாகும். இந்த திட்டத்தில், பயனர்கள் அன்லிமிடெட் டேட்டா மற்றும் பல OTT சேவைகளை அணுகலாம். மேலும் இந்த திட்டங்களை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ரிலையன்ஸ் ஜியோ,தற்பொழுது தனது பயனர்களுக்கான தீபாவளி தமக்கா ஆபரை அறிவித்துள்ளது. இந்த புதிய திட்டம் JioFiber பயனர்களுக்காக தனித்துவமாக வடிவமைக்கப்பட்டுள்ளது, மற்றும் இதில் அன்லிமிடெட் டேட்டா மற்றும் பல OTT சேவைகள் வழங்கப்படுகின்றன.
இந்த சலுகை செப்டம்பரில் அறிமுகமாகிய JioFiber சேவைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது. JioFiber பயனர்கள் மட்டுமே இந்த திட்டத்தை பெறமுடியும்.
JioFiber 30 Mbps திட்டம் பற்றி பார்க்கலாம்,
ஜியோ ரூ.2,222 திட்டம், இந்த திட்டத்தின் கீழ், 30 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா, இலவச வாயிஸ் கால்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை அணுகலாம். 90 நாட்களுக்கு ரூ.101 மதிப்புள்ள 100 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் Disney+ Hotstar, Sony Liv, ZEE5, JioCinema Premium மற்றும் பல OTT சப்ஸ்கிரிப்ஷன்கள் இருக்கின்றன.
Jio Rs 3,333 திட்டம் பற்றி பார்க்கலாம்,
இந்த திட்டம் 100 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா வழங்குகிறது. 3,333 ரூபாயில், பயனர்கள் இலவச வாயிஸ் கால்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களுக்கான அணுகலை பெறுவர். இதனுடன் 90 நாட்களுக்கு 150 ஜிபி கூடுதல் டேட்டா வழங்கப்படுகிறது. இந்த திட்டமும் OTT சப்ஸ்கிரிப்ஷன்களை கொண்டுள்ளது.
Jio Rs 4,444 திட்டம் பற்றி பார்க்கலாம்,
இந்த திட்டம் 100 Mbps வேகத்தில் அன்லிமிடெட் டேட்டா, இலவச வொயிஸ் கால்கள் மற்றும் 800 க்கும் மேற்பட்ட டிவி சேனல்களை வழங்குகிறது. இதன் கீழ் 90 நாட்களுக்கு ரூ.199 மதிப்புள்ள 200 ஜிபி கூடுதல் டேட்டா இலவசமாக வழங்கப்படுகிறது. பயனர்கள் Netflix, Amazon Prime Lite மற்றும் FanCode ஆகியவற்றிற்கு அணுக முடியும்.
JioFiber என்ட்ரி லெவல் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்,
ஜியோவின் 30 Mbps என்ட்ரி லெவல் திட்டம் புதிய பயனர்களுக்காக 6 அல்லது 12 மாதங்களுக்கு ரூ.399க்கு கிடைக்கிறது. மேலும், இது 12 OTT பயன்பாடுகளை உள்ளடக்கிய ரூ.599 திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது, இது 6 அல்லது 12 மாதங்கள் அடிப்படியில் உள்ளது.