Why Ratan Tata Not Among Billionaires List - பொதுவாகவே எல்லோருக்கும் மனதில் எழும் ஒரு கேள்வி, ஏன் ரத்தன் டாடா, அம்பானி, அதானி போல பில்லியனர்கள் லிஸ்ட்டில் எப்போதும் இருப்பது இல்லை என்று, அதற்கான விடையை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Why Ratan Tata Not Among Billionaires List - ரத்தன்
ஜி டாடாவிற்கு பிறகு டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பை ஏற்ற ரத்தன் டாடா, டாடா குழுமத்தின் முன்னேற்றத்திற்கு தன் ஒட்டு மொத்த திறனையும் அதில் செலவழித்தார், டாடா நிறுவனத்தை உலகளாவிய அளவில் விரிவு படுத்தினார், இலாபம் தரும் துறைகளை எல்லாம் தேர்ந்து எடுத்து, கால் பதித்து, அந்த அனைத்து துறைகளிலும் சாதித்து காட்டினார், இன்று உலகளாவிய அளவில் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டாடா நிறுவனம் வெற்றிகரமாக இயங்கி கொண்டு இருக்கிறது என்றால் அதற்கு ரத்தன் டாடா என்னும் ஆகப் பெரும் தலைமை தான் காரணம்.
சரி, இத்தனை நிறுவனங்கள் இருந்தும் ஏன் ரத்தன் டாடா பில்லியனர்கள் லிஸ்ட்டில் இல்லை?
டாடா
நிறுவனத்தின் நிறுவனர் ஜாம்செட்ஜியின் கொள்கை என்ன தெரியுமா, ’நாம் மக்களிடம் இலாபம் என்று எடுத்ததை, திரும்பவும் மக்களிடமே கொண்டு சேர்க்க வேண்டும்’ என்பது தான், அதை அன்றைய ஜாம்செட்ஜியில் இருந்து, இன்றைய ரத்தன் டாடா வரை சிறப்பாகவே செய்து கொண்டு இருக்கிறார்கள். அதாவது டாடா நிறுவனத்தின் நோக்கம் என்பது சம்பாத்யம், பில்லியனர்கள் ஆக வேண்டும் என்பது
எல்லாம் இல்லை, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும், அவ்வளவு தான் அவர்களின் கொள்கை.
அதாவது டாடா நிறுவனம் ஆரம்பித்த காலத்தில் இருந்தே தனது ஒட்டு மொத்த இலாபத்தில் 52 முதல் 65 சதவிகிதம் வரை, கல்வி, மருத்துவம், ஏழைகளுக்கான உதவி, கிராம மேம்பாடு, முன்னேற்றத்தை நோக்கிய திட்டங்கள் என தேசத்தை வளப்படுத்துவதில் செலவழித்து இருக்கின்றன, ரத்தன் டாடா நினைத்து இருந்தால் இன்று அம்பானி, அதானி போல உலக பணக்காரர்கள் வரிசையில் இடம் பிடித்து இருக்கலாம், ஆனால் அவருக்கு அதில் எல்லாம் துளி கூட விருப்பமில்லை, அவரைப் பொறுத்தவரை சேவைகளை விட, பில்லியனர்கள் ஆவது ஒன்றும் பெரிய விடயமில்லை.