Who Is Noel Tata - டாடா அறக்கட்டளையின் புதிய தலைமையை ஏற்க இருக்கும் இந்த நோயல் டாடா என்பவர் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Who Is Noel Tata - ரத்தன் டாடாவின் தந்தையான நோவல் டாடாவின், இன்னொரு மனைவியான சிமோன் நோவல் டாடாவின் மகன் தான் இந்த நோயல் டாடா, எளிமையாக சொல்ல வேண்டுமானால் ரத்தன் டாடாவின் ஒன்று விட்ட சகோதரர் தான் இந்த நோயல் டாடா, இங்கிலாந்தில் செயல்பட்டு வரும் சஸ்சக்ஸ் பல்கலைகழகத்தில் இளங்கலை படிப்பை முடிந்த நோயல் டாடா, ஆரம்ப காலக்கட்டத்தில் டாடா இண்டர்நேஷனல், ட்ரெண்ட், டைட்டன் இண்டஸ்ட்ரீஸ் என டாடாவின் பல நிறுவனங்களில் பணி புரிந்து வந்தார்.
டாடா குழுமத்தின்
தலைவராக இருந்த ரத்தன் டாடா, 2012 யில் ஓய்வை அறிவிக்கும் முன்பு, அந்த தலைமைக்கான
போட்டியில் நோயல் டாடாவும் ஒரு போட்டியாளராக இருந்தார். ஆனால் ரத்தன் டாடாவுக்கு அப்போதைய
சூழலில், நோயல் டாடா அனுபவம் மிக்கவராக தெரியவில்லை, அதனால் நோயல் டாடாவின் பெயர் பரிந்துரையை
ஏற்க மறுத்தார் ரத்தன். அதற்கு பின்னர் பல்வேறு குழப்பத்திற்கு பிறகு டாடா குழுமத்தில்
ஆலோசகராக செயல்பட்டு வந்த, சைரஸ் மிஸ்டரி டாடா குழுமத்தின் தலைமை ஏற்றார்.
ரத்தன் டாடா மட்டும் நோயல் டாடாவின் பெயர் பரிந்துரையை அப்போதே ஏற்று இருந்தால், நோயல் டாடா 2012 -யிலேயே டாடா குழுமத்தின் தலைமையை ஏற்று இருப்பார், ஆனால் அதற்கு பின்னர் டாடா குழுமத்தின் பல நிறுவனங்களில் நோயல் டாடாவிற்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டது, டாடா அறக்கட்டளையிலும் நோயல் டாடா முக்கிய பொறுப்பாளராக நியமிகப்பட்டார், கிடைத்த வாய்ப்புகளை எல்லாம் முறையாக பயன்படுத்திக் கொண்டு நல்ல அனுபவத்தை அதில் இருந்து எடுத்துக் கொண்டார்.
டாடா அறக்கட்டளையின் தலைமை
ரத்தன்
டாடாவின் மறைவிற்கு பின்னர், டாடா குழுமத்தின் 61 சதவிகித பங்குகளை கொண்டு இருக்கும் டாடா அறக்கட்டளைக்கு யார் பொறுப்பேற்க போகிறார்கள் என பெரும் கேள்வி
அனைவரின் முன்பும் எழுந்தது, ஆனால் தற்போது அந்த இடத்திற்கு நோயல் டாடா போட்டி இன்றி தேர்வு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது, டாடா குழுமத்தின் ஆலோசகர்கள் அனைவரும் ஒருமனதாக நோயல் டாடாவை தேர்ந்து எடுக்கும் பட்சத்தில் டாடா அறக்கட்டளையின் புதிய தலைமையாக நோயல் டாடா செயல்பட வாய்ப்புகள் இருக்கிறது.
" அன்றே
ரத்தன்
டாடா
ஒருவரை
தலைமைக்கு
மறுத்து
இருக்கிறார்
என்றால்,
அதில்
ஏதாவது
ஒரு
முக்கிய
காரணம்
இருக்கும்,
இன்று
ரத்தன்
டாடா
இருந்து
இருந்தால்
நோயல்
பதவியில்
ஏறி
இருக்க
முடியுமா
என்பது
நிச்சயம்
சந்தேகத்திற்கு
உரியது
தான்
என
இணையவாசிகள்
சமூக
வலைதளங்களில்
தங்கள்
கருத்துக்களை
பகிர்ந்து
வருகின்றனர்
"