Stand Up India Scheme Details In Tamil - புதியதாக தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு ரூபாய் 10 இலட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கும் ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Stand Up India Scheme Details In Tamil - முதலில்
ஸ்டாண்ட் அப் இந்தியா திட்டம் என்ன என்பது குறித்து பார்க்கலாம், பெண் தொழில் முனைவோர் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் மக்கள் தொழில் துவங்குவதற்கு ஏதுவாக, ரூபாய் 10 இலட்சம் முதல் 1 கோடி வரை கடன் வழங்கும் திட்டம். ஏப்ரல் 2016 ஆம் ஆண்டு ஒன்றிய அரசால் துவங்கப்பட்ட இத்திட்டம் 2025 வரை செயலில் இருக்கும் என மத்திய அரசு
அறிவித்து இருக்கிறது.
சரி இத்திட்டத்தில் எப்படி இணைவது?
1) முதலில் நீங்க துவங்க நினைக்கும் தொழில் பசுமை சார்ந்ததாக இருக்க வேண்டும், பசுமை சார்ந்த பண்ணை துறை அல்லாது உற்பத்தி, சேவை, நிறுவனங்களாக இருக்க வேண்டும்.
2) தொழிலுக்கான திட்ட வடிவம் இருக்க வேண்டும்.
3) திட்டவடிவம், ஆதார், பான் கார்டுகள், தொழிலுக்கான நிலம் இருக்கும் பட்சத்தில் நேரடியாக மாவட்ட தொழில் மையத்திற்கு சென்று திட்டத்தில் இணைவதற்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும்.
4) உங்களது திட்ட வடிவம் ஏற்றுக் கொள்ளக்கூடிய பட்சத்தில், விண்ணப்பம் மாவட்ட தொழில் மையத்தில் இருந்து பொதுத்துறை வங்கிகளுக்கு அனுப்பப்படும்.
5) வங்கிகளே
உங்கள் தொழிலுக்கு எவ்வளவு கொடுக்க முடியும் என்பதை தீர்மானித்து மற்ற பிராசஸ்களை செய்து முடிக்கும்.
திட்டத்திற்கான விதிமுறைகள்
என்ன
என்ன?
1) முதலில் திட்டத்தில் இணைய இருப்பவர்கள் பதினெட்டு வயதை நிரம்பி இருக்க வேண்டும்.
2) பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடன் வழங்கப்படும்.
3) க்ரீன் பீல்டு தொழில்களுக்கு மட்டுமே இத்திட்டத்தின் கீழ் கடனுதவி கிடைக்கும்.
4) இத்திட்டத்தின் கீழ் இணைய இருக்கும் தனி நபர், அவர் துவங்க நினைக்கும் தொழிலுக்கான, 51 சதவிகித முதலாளித்துவத்தையும், அதிகாரத்தையும் அவரே கொண்டு இருக்க வேண்டும்.
5) தொழிலை
பாதி துவங்கி விட்டு கடன் கோருபவர்களுக்கு இத்திட்டம் பொருந்தாது.
“ தாழ்த்தப்பட்டவர்கள்,
பழங்குடியின
மக்கள்,
பெண்
தொழில்
முனைவோர்கள்
மற்றும்
பொருளாதார
ரீதியாக
பின்
தங்கியவர்களை
இந்த
சமூகத்தில்
ஒரு
குறிப்பிட்ட
நன்மதிப்பிற்கு
உயர்த்த
இத்திட்டம்
பெருமளவில்
உதவும்
“