Sikkim Tax Free -இந்தியாவில் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் வருமான வரி செலுத்துவது கட்டாயமாக இருக்கும், ஆனால் சிக்கிம் மாநிலம் இதில் மாறுபட்டு இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், ஒரே ரூபாயும் வரி செலுத்த வேண்டியதில்லை.மேலும், இதை பற்றி விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் வருமானம் ஈட்டுபவர்கள் அனைவரும் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் ரன்பது கட்டாயமாக இருக்கிறது.ஆனால், சிக்கிம் மாநிலம் மட்டும் இதற்க்கு விலக்காக உள்ளது. இங்கு வசிக்கும் மக்கள் கோடிக்கணக்கில் சம்பாதித்தாலும், அரசுக்கு ஒரே ரூபாய் கூட வரி செலுத்த வேண்டிய தேவையில்லை.1975-ஆம் ஆண்டு இந்தியாவின் ஒரு பகுதியாக மாறிய சிக்கிம், சிறப்பு அந்தஸ்தை பெற்றுள்ளது.
சிக்கிமின் வரி விலக்கு பற்றி காண்போம்,
வருமான வரிச் சட்டம், 1961-ன் பிரிவு 10 (26AAA) மற்றும் அரசியலமைப்பின் 371-F பிரிவின் கீழ் சிக்கிமின் மக்கள் வரி விலகலால் பாதுகாக்கப்பட்டுள்ளனர்.இதன் மூலம், வட்டி, ஈவுத்தொகை மற்றும் பிற ஆதாரங்களில் இருந்து வரும் வருமானம் ஆகியவற்றுக்கு முழு வரி விலக்கு வழங்கப்படுகிறது.
இந்தியாவில் வருமான வரி விதிகள் பற்றி பார்ப்போம்,
இந்தியாவில், வருமானம் ஈட்டும் அனைவருக்கும் வரி செலுத்துவது கட்டாயமான ஒன்று.ஆனால் சிக்கிமில் உள்ளவர்கள் இந்த கடமையை தவிர்க்கக்கூடிய நிலைமையில் உள்ளனர், மேலும் கோடிக்கணக்கில் சம்பாதிக்கிறவர்களும் வரியிலிருந்து விலக்கு பெறுகிறார்கள்.
இந்தியாவில் வருமான வரி கணக்குகளை (ITR) தாக்கல் செய்ய ஜூலை 31 என்ற காலக்கெடு இருந்தது. ஆனால், சிக்கிம் மாநிலத்தவர்களுக்கு இந்த கட்டாயம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிக்கிமின் வரி விலக்கிற்கான காரணம், 1975-ல் இந்தியாவுடன் இணைந்த போது, சிக்கிம் தனது பழைய சட்டத்திட்டங்களை மற்றும் சிறப்பு அந்தஸ்தை தொடருவதற்கான நிபந்தனை கொண்டிருந்தது. இதனால், இங்கு உள்ள மக்கள் வருமான வரி சட்டத்தின் கீழ் முழுமையான விலக்கு பெறுகிறார்கள்.இது மாநிலத்தின் பொருளாதார நடவடிக்கைகள், முதலீடுகள் மற்றும் ஒட்டுமொத்த வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.