Gautam Adani Wife-கோடீஸ்வரர் அதானியின் மனைவி, இந்தியாவின் பெரும் நிறுவனமான அதானி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.மேலும்,இவர் பல் மருத்துவத்தில் பட்டம் பெற்றவர், சமூகப் பொறுப்பில் தனது முக்கிய பங்களிப்பால் பலரையும் ஈர்த்து வருகிறார்.
கோடீஸ்வரர் அதானியின் மனைவியான பிரிதி அதானி, அதானி அறக்கட்டளையின் தலைவராக உள்ளார்.மேலும், அவர் சமூகப் பொறுப்பில் மற்றும் கல்வியில் சிறந்த பங்களிப்பு அளித்ததற்காக பாராட்டப்படுகிறார்.இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய இலாப நோக்கற்ற நிறுவனங்களில் ஒன்றான அதானி அறக்கட்டளை, பிரிதியின் முன்வைப்பில் சமூக சேவையில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
அதானியின் மனைவியான பிரிதி அதானியை பற்றி பார்க்கலாம்,
இவர் 1965 ஆம் ஆண்டு குஜராத்தில் பிறந்து, 1986ல் தொழிலதிபர் கௌதம் அதானியுடன் திருமணம் செய்து கொண்டார்.இந்நிலையில், அகமதாபாத்தில் உள்ள அரசு பல் மருத்துவக் கல்லூரியில் பல் அறுவை சிகிச்சையில் பட்டம் பெற்ற பிரிதி அதானி, தற்காலத்தில் பல் மருத்துவராக பணியாற்றி வருகிறார்.
மேலும்,1996ல் அவரால் நிறுவப்பட்ட அதானி அறக்கட்டளை, கல்வி, பொது சுகாதாரம், கிராமப்புற உள்கட்டமைப்பு மற்றும் நிலையான வாழ்வாதாரம் போன்ற துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் 18 மாநிலங்களில் 5,700க்கும் மேற்பட்ட கிராமங்களில் இந்த அறக்கட்டளை இன்றும் செயல்பாட்டில் இருந்து வருகிறது.
இந்நிலையில், மற்ற கோடீஸ்வரர்களைப் போலவே, பிரிதியின் சொத்து மதிப்பு ரூ 8,000 கோடியாக கணிக்கப்படுகிறது.மேலும்,அதானி, தன்னைவிட அதிக கல்வித் தகுதி உடையவர் இருந்தும், பிரிதியை திருமணம் செய்வதற்கு தேர்ந்தெடுத்ததை பெருமையாகக் கூறுகிறார். 10ம் வகுப்பு கூட முடிக்கவில்லை என்ற நிலையில், பயிற்சி பெற்ற மருத்துவராக திருமணம் செய்த முடிவை அவர் மிகுந்த உற்சாகமாக கூறியுள்ளார்.