Chicken Egg Problem- சமீபத்தில் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் முட்டைகளை கிளாஸ் 1 நிலைக்கு வகைப்படுத்தி ஒட்டு மொத்தமாக அழிக்க முற்பட்டு இருக்கிறது. கிளாஸ் 1 வகை என்பது உயிருக்கே ஆபத்து விளைவிப்பது அல்லது உடல் நலக்கோளாறுகளை ஏற்படுத்த வல்லதாக அறியப்படுகிறது.
சரி, உயிருக்கே ஆபத்து விளைவிக்கும் அளவுக்கு முட்டைகளில் என்ன இருக்கிறது?
பொதுவாகவே நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் சாலமோனல்லம் இருப்பது சாதாரணம் தான், ஆனால் சாலமோனல்லம் ஒரு ஆண்டிபயாடிக்கை உருவாக்கி எதிர்ப்பு திரிபை ஆட்கொள்ளும் வகைக்கு வந்து விடும் பட்சத்தில் அது மிகவும் பாதுகாப்பாற்றது என அமெரிக்க உணவு பாதுகாப்பு துறை எச்சரித்து இருக்கிறது. அவ்வாறாக எதிர்ப்பு திரிபை உருவாக்கி இருக்கும் சாலமோனல்லம் கொண்ட முட்டையை மனிதர்கள் உட்கொள்ளும் போது அது உயிருக்கே ஆபத்தை உருவாக்கும் என கூறப்படுகிறது.
சமீபத்தில் அமெரிக்காவில் மூன்று மிகப்பெரிய பண்ணைகளில் இருந்து மார்க்கெட்டுகளுக்கு வந்த முட்டைகளில் இந்தவகை பாக்டீரியாக்கள் கண்டறியப்பட்டதாக தெரிகிறது, உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்ட அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ஒட்டு மொத்தமாக அந்த முட்டைகளை அழிக்க உத்தரவு இட்டது, ஏற்கனவே வீட்டிற்கு வாங்கிச் சென்றவர்களையும் அழிக்க சொல்லி எச்சரிக்கை விடுத்தது.
அப்படி என்றால் முட்டை பாதுகாப்பானது இல்லையா?
முட்டை பாதுகாப்பானது தான், ஆனால் அது வளர்க்கும் சூழல், முட்டை உற்பத்தியை அதிகரிக்க கோழிகளுக்கு போடப்படும் ஊசிகள், கோழிகளில் செய்யப்படும் மரபணு மாற்றங்கள், முட்டை சந்தைக்கு வரும் நாள், ஆகியவற்றின் காரணமாக முட்டைகளில் இருக்கும் சாலமோனல்லா எதிர்ப்புபொருளை உருவாக்கும் அளவிற்கு வளர்ந்து விடுகிறது.
இது அனைவருக்கும் தீங்கு விளைவிக்குமா என்றால் நிச்சயமாக இல்லை, ஆனால் இந்த முட்டைகளை உட்கொள்ளும் பட்சத்தில், சிறு குழந்தைகள், வயதானவர்கள், ஆண்டாசிட்கள் போன்ற மருந்துகளை எடுத்துக் கொள்பவர்களுக்கு வாமிட், வயிற்று வலி, டீஹைடிரேசன், மூட்டு வலி, மூளைக் காய்ச்சல் உள்ளிட்ட தொற்றுகளை ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கிறது.
சரி, இந்தியாவிலும் இந்த பிரச்சினைகள் இருக்கிறதா?
நிச்சயம் இருக்கலாம், தினமும் ஒரு முட்டை எடுத்து உடைத்து ஆராய்ந்து, ஒட்டு மொத்தமாக அழிப்பது என்பது இந்தியாவில் நடப்பது ரொம்ப ரேர் தான், இங்கும் உணவு பாதுகாப்பு துறை எல்லாம் இருக்க தான் செய்கிறது, ஒரு நாளைக்கு நாமக்கல்லில் மட்டுமே 5 கோடி முட்டைகள் ஏற்றுமதி ஆகிறது என்னும் போது அத்தனையையும் ஆராய்வது என்பது மிக கடினம், வேண்டுமானால் பண்ணைகளை முறையாக ஆய்வு செய்தால் இந்தியா, இது போன்ற பிரச்சினைகளில் இருந்து தப்பலாம்.
ஒரு நுகர்வோர்களால் முட்டை எந்த தன்மையில் இருக்கிறது என்பது மிக மிக கடினம், ஆதலால் இந்த விடயத்தில் அரசே நேரடியாக செயல்பட்டு தேசத்தில் இருக்கும் அனைவருக்கும் பாதுகாப்பான முட்டைகள் தான் செல்கிறது என்பதை உணவு பாதுகாப்பு துறையின் மூலம் உறுதிப்படுத்துவது அவசியம் ஆகிறது.