Gold News Today-இன்றைய ஆபரண மார்க்கெட் நிலவரத்தின்படி, தமிழகத்தில், தங்கத்தின் விலை சற்றே ஆறுதல் அளிக்கும் வகையில் பவுனுக்கு 120 ரூபாய் குறைந்து இருக்கிறது. தொடர்ந்து எகிறி வரும் தங்கத்தின் விலை அனைவரையும் அச்சமடைய செய்த நிலையில் சற்றே ஆறுதல் அளிக்கிறது இந்த விலை சறுக்கம்.
நேற்றைய தினம் 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ஆபரண மார்க்கெட்டுகளில் கிராமிற்கு, ரூபாய் 7,120 என்று இருந்த நிலையில், இன்று கிராமிற்கு 20 ரூபாய் குறைந்து ரூபாய் 7,100 என்ற விலையில் விற்கப்படுகிறது. மேலும் 18 காரட் தங்கம் ரூபாய் 5,809/ கிராம் எனவும், 24 காரட் தூய தங்கம் ரூபாய் 7,745/ கிராம் எனவும் விற்கப்படுகிறது.
வெள்ளி நேற்றைய தினம் கிராமிற்கு ரூபாய் 103 என இருந்த நிலையில், இன்றும் ஆபரண மார்க்கெட்டுகளில் இன்றும் அதே விலைக்கு விற்கப்படுகிறது
உச்சத்தில் இருந்து கீழ வர மறுக்கும் தங்கத்தின் விலை இனி ஏழாயிரத்திற்கு கீழ் குறையாதோ என ஏக்கத்தில் தினமும் மார்க்கெட் விலையை உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறார்கள் வாடிக்கையாளர்கள்