RBI Repo Rate Cut And Impacts - வங்கிகளுக்கான Repo Rate குறைப்பு என்பது யாருக்கு சாதகம் மற்றும் யாருக்கு பாதகம் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இங்கு எல்லோருக்குமே ஒரு கடன் தேவை என்பது இருக்கும், அது போல வங்கிகளுக்கு சில இக்கட்டான சூழலில் கடன் தேவைப்படும், அது போல மத்திய வங்கியான ரிசர்வ் வங்கிக்கும் சில சமயங்களில் கடன் தேவைப்படும், இந்த வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கிகளுக்கு இடையிலான இந்த கடன் பரிமாற்றங்கள் தான் நாட்டின் பொருளாதார சமநிலையையும், பண புழக்கத்தையும் தீர்மானிக்கின்றன.
பொதுவாக Repo Rate என்பது வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடன் கொடுக்கும் போது, அந்த கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் ஒரு வட்டி வீதம் ஆகும், ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு விதிக்கும் இந்த வட்டி வீதத்தை (Repo Rate) பொறுத்து தான், வங்கிகள் வாடிக்கையாளர்களின் டெபாசிட்களுக்கான வட்டி, பயனர்களுக்கு கொடுக்கும் கடன்களுக்கான வட்டி உள்ளிட்டவைகளை தீர்மானிக்கின்றன.
சரி தற்போது Repo Rate 6.50% யிலிருந்து 6.25% ஆக மாறி இருக்கிறதே இதனால் என்ன சாதகம் என்ன பாதகம் என்றால், நீண்ட காலக்கடன் முக்கியமாக கார் கடன் மற்றும் வீட்டுக்கடனுக்கான வட்டி வீதம் குறைய வாய்ப்புகள் அதிகம், 15 வருடம், 20 வருடம் என வீட்டுக்கடன் கட்டிக் கொண்டு இருக்கும் வாடிக்கையாளர்கள் தங்கள் கடனை ஒரு வருடத்திற்கு முன்பாகவே இதன் மூலம் செலுத்தி முடிக்க முடியும்.
கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கு பிறகு Repo Rate என்பது ரிசர்வ் வங்கியால் குறைக்கப்பட்டு இருக்கிறது, கடனுக்கான வட்டி குறைகிறதே அப்படி என்றால் சாதகம் தானே என்றால், அது தான் இல்லை, இந்த Repo Rate குறையும் சமயத்தில் FD க்கான வட்டி வீதம் குறையவும் வாய்ப்புகள் அதிகம், இதனால் பிக்ஸடு டெபாசிட்களுக்கு பணத்தை போட்டு வைத்து இருப்பவர்களுக்கு இது பாதகமாய் அமைந்து விடும்.
" சிம்பிளாக சொல்ல வேண்டுமானால், இந்த Repo Rate குறைப்பு, கடன் வாங்கியவர்களுக்கு சாதகம், வங்கிகளில் பணத்தை சேமிப்பவர்களுக்கு பாதகம் "