RBI Lifts Restriction On Kotak - ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு ஏப்ரலில் கோட்டக் மஹிந்திரா வங்கிக்கு விதித்த தடையை தற்போது விடுவித்து உத்தரவு இட்டு இருக்கிறது.
கோட்டக் மஹிந்திரா வங்கி ரிசர்வ் வங்கியின் ஒரு சில அதிகாரப்பூர்வ சட்டங்களை சரியாக பின்பற்றாத காரணங்களாலும், வங்கியின் ஆடிட்டிங் சரியில்லை என்று கூறியும் வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949, 35 A என்ற பிரிவின் படி, வங்கியின் ஒரு சில ஆன்லைன் செயல்பாடுகளுக்கும், புதியதாக கிரெடிட் கார்டுகள் வழங்குவதற்கும் வங்கிக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது.
அதே சமயத்தில் கோட்டக் மஹிந்திரா வங்கியின் செயல்பாடுகளும் நிர்வாகமும் ஆடிட்டிங்கும் ஒழுங்கு படுத்தப்படும் பட்சத்தில் இந்த தடை திரும்பி பெறப்படும் எனவும் ரிசர்வ் வங்கி அறிவித்து இருந்தது, அந்த வகையில் கோட்டக் மஹிந்திரா வங்கி தங்களது நிர்வாக செயல்பாடுகளையும், வெளிமுறை ஆடிட்டிங்கையும் சரி செய்து ரிசர்வ் வங்கியிடம் சமர்ப்பித்தது.
அந்த வகையில் ரிசர்வ் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கியின் தற்போதைய செயல்பாடுகளை மறு ஆய்வு செய்து, கோட்டக் மஹிந்திரா வங்கியின் மீது விதிக்கப்பட்ட அத்துனை செயல்பாட்டுக்கான தடைகளையும் தளர்த்தி இருக்கிறது, இதன் மூலம் கோட்டக் மஹிந்திரா வங்கி வாடிக்கையாளர்கள் புதிய கிரெடிட் கார்டுகளை பெற முடியும், மொபைல் வங்கி சேவையையும் தடையில்லாமல் பெற முடியும்.
வங்கிகளில் நடைபெறும் முறைகேடுகளை, களைய ரிசர்வ் வங்கி தொடர்ந்து பல கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது, தனியார் வங்கிகள் முறையான ஆடிட்டிங்கையும் ஆன்லைன் செயல்பாடுகளையும் கையாளாவிட்டால் எந்த நேரத்திலும் எந்த தடையும் வங்கிகளின் மீது விதிக்கப்படலாம் என ரிசர்வ் வங்கி எச்சரித்து இருக்கிறது.