Essential Documents for Securing A Home Loan - வீட்டுக்கடன் வாங்குவதற்கு என்ன என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பது குறித்து இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.
வீடு என்பது பொதுவாகவே பலருக்கும் ஒரு மிகப்பெரிய கனவாக இருக்கும், ஆனால் ஒரு வீடைக் கட்டுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல, கையை வைத்தால் செலவு இழுத்துக் கொண்டு போகும், இன்று பெரும்பாலான வீடுகள் பார்த்திருப்போம் கட்டி விட்டு பாதியிலேயே நிற்கும், அதற்கு முழு காரணம் செலவுகள் தான், யோசிப்புக்கும் மிஞ்சிய செலவுகள் இருக்கும்.
ஆதலால் இரு சிறிய வீடு கட்டினால் கூட குறைந்த பட்சம் 10 இலட்சம் ஆவது கையில் வைத்துக் கொண்டு தான் கட்ட ஆரம்பிக்க வேண்டும், ஆனால் ஒரு சாதாரண நடுத்தர மக்களுக்கு அது சாத்தியமா என்றால் நிச்சயம் இல்லை, சரி அப்படின்ன என்ன செய்யலாம் இருக்கவே இருக்கு வீட்டுக்கடன், வங்கிகளுக்கு நேரடியாக சென்று வீட்டுக்கடன் குறித்த தகவல்களை பெறலாம்.
சரி வீட்டுக்கடனுக்கு என்ன என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்றால், முதலில் நீங்கள் கட்ட போகும் வீட்டின் பத்திரம், பின்னர் ஆதார், பான்கார்டு, வீடு தாயின் பெயரிலோ, தந்தையின் பெயரிலோ இருந்தால் கடனுக்கு பொறுப்பு ஏற்கும் வகையில் மகனின் பெயர் கடன் பத்திரத்துடன் இணைக்கப்படும், மகனுக்கு ஆதார் மற்றும் பான் கார்டு இருக்க வேண்டியது அவசியம்.
இது போக நிலத்திற்கான பிளாட் அப்ரூவல், பிளான் அப்ரூவல் நிச்சயம் கையில் இருக்க வேண்டும், உங்களது பிளான் அப்ரூவல் உங்களுக்கு தேவையான பண மதிப்புடன் ஒத்து போக வேண்டும், சம்பளதாரராக இருந்தால் பொதுத்துறை வங்களில் சம்பள ஸ்லிப் கேட்பார்கள், கூலி தாரராக, பணத்தை கையில் சம்பளமாக பெறுபவராக இருந்தால் கூட HDFC, ICICI போன்ற தனியார் வங்கிகள் வீட்டுக் கடன் தருகின்றன.
" வட்டியை பொறுத்தமட்டில் 8.10% யில் இருந்து துவங்கி 9% வரை வீட்டுக் கடனுக்கான வட்டி நெருங்குகிறது, உங்களது சிபிலுக்கு ஏற்ப வட்டியில் மாற்றம் இருக்கலாம் "